பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் நூற்பாவில் தொல்காப்பியனுர் குறித்துள்ளார். இவ்வாறு இறைவனது ஆணையாகிய நல்லூழின் திறத்தால் ஒரு பொழிலகத்துத் தலைமகளை எதிர்ப்பட்டு அன்பினுற் கூடி மகிழ்ந்த தலைவன், தான்பெற்ற இன்பத்தியல்பினைக் கூறுவதாக அமைந்தது,

சொற்பா லமுதிவள் யான் சுவை யென்னத் துணிந்திங்ங்னே நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நாணிவ ளாம்பகுதிப் பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே, (8) எனவரும் திருக்கோவையாகும். ' புலப்படச் சொல்லும் போது அமிழ்தம் இவள், யான் அதன் சுவை” என்று துணிந்து சொல்ல, இவ்வண்ணமே நல்லூழின்பாற்பட்ட தெய்வம் தருதலால், இன்று (புணர்ச்சியால் வரும் இன்பம் துய்த்தற் பொருட்டாக, யானென்றும் இவளென்றும் வேறு பாட்டோடு கூடிய) அழகை (இதனை அனுபவிக்கின்ற யானே அறியினல்லது) பிறர் யார் அறிவார்?' எனத் தலைவன், தலைவியும் தானும் கூடிப்பெற்ற புணர்ச்சி இன்பத் தின் இயல்பினைக் கூறி மகிழ்கின்ருன்.

சொற்பாலமுது இவள், யான் சுவை' என்றது, சுவை யுடைய பொருளுக்கும் அதன்கண் பிரிவற அமைந்த சுவைக் கும் வேறுபாடு இல்லாதவாறுபோல, எனக்கும் இவளுக்கும் வேறுபாடில்லை என்றவாறு. இவ்வாறு தான் அவள் என் னும் வேற்றுமையின்றித் தலைவன் தலைவி இருவரும் எதிர்ப் பட்டு மகிழும் இயல்பினைத் தானே அவளே தமியர் கானக், காமப்புணர்ச்சி இருவயின் ஒத்தல் (இறையனரகப்பொருள் சூத்-2) எனவரும் நூற்பாவாலும், “ தானே அவள், அவளே தான்; என்பது என் சொல்லியவாருே எனின், தான் அவள் என்னும் வேற்றுமையிலர் என்றவாறு ' எனவரும் உரைப் பகுதியாலும் நன்குணரலாம். மேற்குறித்த இறையனர் களவியல் நூற்பாவையும் அதன் உரை விளக்கத்தினையும், சொற்பாலமுது இவள், யான் சுவை” எனவும், நான் இவளாம் பகுதிப் பொற்பு’ எனவும் வரும் தொடர்களில் அடிகள் குறித்தருளிய திறம் இங்கு உளங்கொளத் தக்க தாகும்.