பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 15

$

அறிவை மயக்கி இந்திர சாலஞ் செய்வது எம்மிடத்தி லேயோ? நீயோ சாதி அந்தணன். உன்னைக் கூறுதற்கு என்ன இருக்கிறது? குதிரைகளை நடத்திவந்த குதிரைச் சேவகன் எங்கே போயினுன் அவனுடன் வந்த ஏனையோர் எங்கே சென்றனர் அருமறை நூல்களை ஒதியதெல்லாம் இவ்வாறு எம்மை வஞ்சித்தற்குத்தானே ? எனக் கடுமொழி களைக் கூறிஞன். தண்டத் தலைவரை நோக்கி வாதவூர ளுகிய இவனைக் கொடுஞ்சிறையில் வைத்துத் தண்டித்து நம் பொருளனைத்தையும் வாங்குமின் எனப் பணிந்தான்.

தண்டத்தலைவர், வாதவூரடிகளது சிவபக்தி மாண்பினை யுணர்ந்து அடிகளைத் துன்புறுத்தற்கு அஞ்சினராயினும் அரசன் சொற்படி செய்யாவிடில் தமக்குத் தீங்கு வருமென்று அஞ்சி வாதவூரடிகளைச் சிறையில் வைத்துத் தண்டித்தனர். பொறுமைமிக்க பாண்டியன் வாதவூரரைத் தண்டத்தலைவ ருடன் அனுப்பியபின் மனக்கவலையுடன் போந்து தனித் திருந்து வருந்தினுன். இப்பால், சிறையிலே துன்புறும் வாதவூரடிகள், அளவிலாத் துயரத்தால் மனங்கலங்கித் திருவேசறவு என்னும் பனுவலைப்பாடி இறைவனை நினைந்து புலம்பினுர். அந்நிலையிற் சிவபெருமான் அவருள்ளத்தே தோன்றி ஆருத்துயரத்தைத் தணிவித்தருளினர்.

திருவாதவூரடிகளின் துயரத்தைப் போக்கத் திருவுளங் கொண்ட இறைவர், வருணனை நினைத்தருளினர். அவ்வள வில் அவன் விரைந்து சென்று பணிந்து நின்ருன். நீவாத ஆரர்படும் சிறைத்துன்பம் நீங்கக் கங்குற் பொழுதிலே வைகை யாற்றிற் பெருவெள்ளம் வரச்செய் வாயாக’ என இறைவர் வருணனுக்கு அறிவித்தருளினர். வருணனது ஏவ லால் மேகங்கள் திரண்டு மழையைப் பொழிந்தன. வைகை யாற்றிற் பெருவெள்ளமுண்டாயிற்று. என்றுமில்லாத அள வில் வைகையாற்றில் வந்த பெருவெள்ளம், அதன் கரை யினை யுடைத்துக்கொண்டு மதுரை நகருட் புகுந்தது. அதுகண்ட ஊர்காவலர் வெள்ளம் பெருகிய செய்தியை ஊர்மக்களுக்குப் பறையறைந்து தெரிவித்தனர். பறை யொலி கேட்டுத் துணுக்குற்றெழுந்த பாண்டியன், கால மல்லாக் காலத்தே வைகை கடலெனப் பெருகியதே ? இது என்ன ஊழிக்காலமோ எனமணங்கவன்ருன் ; நாடு கண் காணிக்கும் தனது அதிகாரியை யழைத்து, வசதவூர் முனி