பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பன்னிரு திருமுறை வரலாறு


வரை நாம் சிறை செய்ததஞல் விளைந்த துன்பமோ இது? இறைவன் திருவுள்ளத்தை யாரறிவார்? மதுரை நகரில் மனேக்கட்டுடன் குடியிருப்போர் ஒவ்வொருவர்க்கும் தக்க வண்ணம் அடைத்தற்குரிய கரைப்பகுதியை அளந்து கொடுத்து விரைவில் அடைக்கச் செய்வாயாக என்று சொல்லி யனுப்பினன். அதற்குள் பொழுதும் விடிந்தது.

அரசனது ஆணையினை மேற்கொண்ட அரசியலதிகாரி, ஊர்க்கணக்கர்களை உடனழைத்துக்கொண்டு மதுரை நகரில் வாழும் இளைஞர் முதல் முதியோர்வரை எல்லோரையும் ஒருசேரத் திரட்டிக்கொண்டு வைகைக்கரையினை யடைந்து அவரவர் அடைத்தற்குரிய கரைப்பகுதிகளை அளந்து கொடுத்தனன். அவரவர்களும் தத்தமக்குரிய கரைப்பகுதி யில் மண்ணிட்டு அடைக்கத் தொடங்கினர். அந்நிலையில் மதுரையில் தென்கிழக்கு மூலையிலமைந்த மனை யொன்றில் வாழும் நரைமுதியாளாகிய பிட்டு வாணிச்சி, தனக்கு அளந்த பங்கினை அடைத்தற்குரிய ஆள்கிடைக்காமல் அழுது புலம்பி அரசதண்டத்திற்கு அஞ்சிக் கூலியாளைத் தேடியலைந்தனள், அவளது துயரத்தைப் போக்கத் திருவுளங்கொண்ட சிவ பெருமான், பதினறு வயதுடைய இளைஞளுகி, மண்வெட்டி யும் கூடையும் கொண்டு அவள்முன் கூலியாளாகத்தோன்றி, 'அன்னேயே, வருந்தாதே, இவ்வுலகத்து என்னைப்போல உனக்கு வேறு ஆள் கிடைக்காது பல்லோரும் வேண்டி யழைக்க அவர்கள்பாற் செல்லாது உன்னை வேண்டி இங்கு வந்தேன். வேண்டுமானுற் சொல் ' என்ருன். ஐயா, நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தீர், உம்மைப் பார்த்தால் எம் வழிபடு தெய்வமாகிய சொக்கநாதரைப் போலவே தோன்று கிறது. மண் சுமவாவிடில் தண்டத் தலைவர்கள் மெய் நோவ அடிப்பார்களே. விரைவில், மண் சுமக்க வல்லிரோ ?” எனப் பிட்டுவாணிச்சியாகிய முதியவள் பரிவுடன் வின விள்ை. அதைக்கேட்ட இறைவன், இளைப்பின்றி விறகு சுமப்பேன். தண்ணீர் சுமப்பேன், மண் சுமக்கமாட்டேகுே? எனக்குக் கூலியாக என்ன தருவாய்' எனக்கேட்டான். "ஐயா, என்னிடத்திற் பொருளில்லை, வெய்தாய் நறுவிதாய் வேண்டுமளவும் நுகரத்தக்க இன்சுவை யுடையதாய் என் பாலுள்ள பிட்டமுதினைக் கூலியாக முற்படத் தருவேன்' என அம்முதியவள் கூறினுள். ' சொக்கனிடத்துப் பேரன்பு பூண்டவள். நீ, எனக்கு உதிராத பிட்டினைக்கொடுக்க வேண்டு