பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

பன்னிரு திருமுறை வரலாறு


பூணிற் பொலி கொங்கையாவியை ஓவியப்

பொற்கொழுந்தைக் காணிற் கழறலை கண்டிலே மென்ருேட் கரும்பினேயே (23) எனவரும் திருக்கோவையும் என்பது இவற்றை ஒப்பு நோக்குங்கால் நன்கு புலனும்,

பாங்கற் கூட்டத்தின்கண் தலைமகன், தலைமகள் முன் நின்று தனது ஆற்ருமை மிகுதி கூறக்கேட்ட தலைமகள், தனக்குரிய நாணம் தன்னை விட்டு நீங்கா நிற்க, அதற்கு வருந்துவதாக அமைந்தது,

குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை

ஏத்தலர் போல் வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன் ருெருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன் வளர்ந்த அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத் தழிகின்றதே. (44) எனவரும் திருக்கோவையாகும். இது,

அளிதோ தானே நானே நம்மோடு நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான் பூங் கரும்பின் ஓங்குமணற் சிறு சிறை தீம்புனல் நெரிதர வீந்துக் கா அங்குத் தாங்கு மள வைத் தாங்கிக் காமம் நெரிதரக் கைந்நில் லாதே’ (149) என்னும் குறுந்தொகைச் செய்யுளை நினைவுபடுத்துவதாகும். பாங்கற் கூட்டத்து இறுதிக்கண், விசும்பும் நிலனும் ஒருங்குபெறவரினும் என் உயிரனைய இவளே மறந்து அதன்கண் முயலேன் எனத் தலைமகன் தனது இன்றி யமையாமை கூறுவதாக அமைந்தது,

நீங்கரும் பொற்கழற் சிற்றம் பலவர் நெடு விசும்பும் வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன் தீங்கரும்பும் அமிழ்துஞ் செழுந்தேனும் பொதிந்து செப்புங் கோங்கரும்புந் தொலைத் தென்னையும் ஆட்கொண்ட

கொங்கைகளே. (4.6) எனவரும் திருக்கோவையாகும். இது,

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கிற் சீர் சாலாவே பூப்போல் உண்கண் பொன் போல் மேனி மாண்வரி யல்குற் குறுமகள் தோண்மாறு படுஉம் வைகலொ டெமக்கே (101)

எனவரும் குறுந்தொகையினை ஒத்திருத்தல் அறிக.