பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 235

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்

பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்

கல்கெழு கானவர் நல்குறு மகளே ’ (71) எனவரும் குறுந்தொகைச் செய்யுளையும்,

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்ளுேய்க்குத் தானே மருந்து ' (1102) எனவரும் திருக்குறளையும் அடியொற்றி யமைந்திருத்தல் காணலாம்.

வாட்டம் வினவிய பாங்கனை நோக்கி, நெருநல நாள் கைலைப்பொழிற்கட் சென்றேன். அவ்விடத்து ஒரு சிற்றிடைச் சிறுமான்விழிக் குறத்தியால் இவ்வாறு ஆயி னேன் ' எனத் தலைமகன், தனக்கு உற்றதனைக் கூறுவதாக அமைந்தது,

கோம்பிக் கொதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பனைமுலைக்கே தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில்லைச் சிவன் ருள் ஆம்பொற் றடமலர் சூடுமென் ஆற்றல் அகற்றியதே. (21) எனவரும் திருக்கோவையாகும். இச்செய்யுள்,

  • சிறு வெள் ளரவின் அவ்வரிக் குருளை

கான யானை அணங்கி யாஅங்கு இளையஸ் முளைவா ளெயிற்றள் வளையுடைக் கையள் எம் அணங்கியோளே ! (119) எனவரும் குறுந்தொகைச் செய்யுட் பொருளை அடியொற்றி அமைந்ததாகும்.

கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது என்னுந்துறையில் அமைந்தது,

  • அம்மவாழி கேளிர் முன்னின்று

கண்ட னிராயிற் கழறலிர் மன்ளுே

மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே (130) எனவரும் அகநானூற்றுப் பாடலாகும். இதனை அடி யொற்றி யெழுந்தவை,

' குண்டலம் சேர்ந்த மதிவாள் முகத்த கொழுங் கயற்கண்

கண்டிலிர் கண்டால் உரையீர் கழறிய கட்டுரையே (31)

எனவரும் பாண்டிக்கோவையும்,