பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க நூல்களும் திருக்கோவையாரும்

இயற்கைப் புணர்ச்சிகண் தலைமகளைக் கண்டு உவந்த நெஞ்சினகிைய தலைமகன், அவளை ஒரு தெய்வப் பூமாலை யாக உருவகஞ் செய்து வியந்துரைப்பதாக அமைந்தது. " திருவளர் தாமரை எனத் தொடங்கும் இத்திருக்கோவை யின் முதல் திருப்பாடலாகும். இங்ங்னம் தலைமகளை ஒரு மாலையாகக் கொண்டு உருவகித்தல் சங்ககாலந் தொட்டு நிலவிவரும் தமிழ் மரபாகும். இம்மரபு,

" கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை

நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ ஐது தொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே (குறுந் - 62) என்னும் குறுந்தொகைச் செய்யுளில் இடம் பெற்றிருத்தல் 卤@了@町显D。

  • பூப்புனை மாலையும் மாலைபுனை மாதரும்

தோற்புனை வில் நாண் தொடர்கைக் கட்டியும் கோச்சேரன் பெயருங் கோதை யென் ருகும்

(திவாகரம் - 11) என்பதனுற் பெண்ணுக்கு மாலை யென்று பெயராயிற்று ' எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இம்மரபினைப் புலப்

படுத்துதல் அறியத்தக்கதாகும்.

இயற்கைப் புணர்ச்சியின்கண் தலைமகளைக் கண்டு அவளை அடையக் கருதிய தலைவன், தன்னிடத்து அவளுக்கு உண்டாகிய காதலை அவள் கண்ணிற் கண்டு தன் மனத்துட் கொள்வதாக அமைந்தது, அணியும் அமிழ்தும் ' என்னும் முதற் குறிப்புடைய ஐந்தாந் திருப்பாடலாகும். இதன் கண்,

பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழ மின்னும்

பணியும் புரை மருங்குற் பெருந்தோளி படைக்கண்களே '

எனவரும் தொடர்,