பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

பன்னிரு திருமுறை வரலாறு


வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையிற் றுங்கல் வேண்டின் என்னுங் கொல்லோ தோழி, மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வலாக ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவாதாயின் இம்மறை அலராகாமையோ அரிதே, அஃதான்று அறிவர் உறுவிய அல்லல்கண்டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே

செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின்

யானுயிர் வாழ்தல் அதனினும் அரிதே (98)

எனவரும் அகநானூற்றுப் பாடற் பொருளை அடியொற்றி அமைந்திருத்தல் நோக்கத்தக்கதாகும்.

உடம்பும் உயிரும் போன்று தலைவியுடன் கூடி மனை யறம் நிகழ்த்தும் தலைமகன், தலைமகளது அன்பின் வழியே ஒழுகாநின்ற திறத்தினை, மணமனை காணவந்த செவிலிக்குத் தோழி எடுத்துரைப்பதாக அமைந்தது.

சீரியலாவியும் யாக்கையு மென்னச் சிறந்தமையாற் காரியல் வாட்கண்ணி யெண்ணகலார் கமலங்கலந்த வேரியுஞ் சந்தும் வியறந்தெனக் கற்பி னிற்பரன்னே காரியல் கண்டர்வண் தில்லை வணங்குமெங் காவலரே. (301)

எனவரும் திருக்கோவையாகும். ' அன்னையே, மழை போலும் மிடற்றினையுடைய இறைவனது வளமார்ந்த தில்லைப்பதியை வணங்கும் எம்முடைய தலைவர், சீர்த்திமிக்க உயிரும் உடம்பும் என்ன ஒருவரை யொருவர் இன்றியமை யாமையால் கரிய வாள் போலும் கண்களையுடைய தலைவியின் கருத்துக்கு மாறுபடாது, தாமரைப்பூவைச் சேர்ந்த தேனும் சந்தனமரமும், இடத்து நிகழ்பொருளும் |டமுமாய் அமைந்து தம் பெருமையைப் புலப்படுத்திற்ை போல, இவளுடன் பிரிவறக்கூடி இவளது பண்பின் வழியே ஒழுகா நின்ருர் எனத் தோழி செவிலிக்குக் கூறும் நிலையில் அமைந்தது இத்திருப்பாடல்.

" தாமரைத் தண் தா துரதி மீமிசைச்

சாந்திற் ருெடுத்த தீந்தேன் போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை" (நற்றிணை 1) எனத் தலைமகள் கூற்ருகவும்,