பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

பன்னிரு திருமுறை வரலாறு


  • சிலையால் எயிலெய்தான் சிற்றம்பலந்தன்னைத்

தலையால் தொழுவார்கள் தலையாளுர்களே (1-80–7)

எனவரும் ஞானசம்பந்தர் தேவாரத்தையும் ஒத்தமைந் திருத்தல் உணரத்தக்கதாகும்.

அடியவரிடத்தே அவரோடு கூடிய களிப்பையுடையே கிை யான் இன்று செம்மாந்து மகிழும் வண்ணம் இறைவன் எனக்கு இன்பத்தினைத் தந்தருளித் தில்லையம்பலத்தின் கண்ணே தீயேந்தி ஆடல் புரிகின்ருன் என்பது பட, இருங்களியாயின் றியானிறுமாப்ப இன்பம் பணிவோர் மருங்களியா அனலாட வல்லோன் (திருக்கோவை - 52) எனவரும் தொடர்,

இறுமாந் திருப்பன்கொலோ ஈசன் பல்கணத்

தெண்ணப்பட்டு 4-9-11) என்னுந் திருவங்கமாலைத் தொடர்க்கு அமைந்த விளக்க மாகத் திகழ்தல் காணலாம்.

தில்லைக் கூத்தனை ஏத்தாதார் துன்புறும் பிறவியிற் பிறப்பராதலின், அவர்களைப் போன்று இனிவரும் நாட் களில் நான் இவ்வாறு நாண்கெடப் பிறவா தொழிக எனத் தலைமகள் தன் நாணத்தை விடுதற்கு வருந்திக் கூறுவதாக அமைந்தது,

' குருநாண்மலர்ப் பொழில் சூழ்தில்லைக் கூத்தனை

யேத்தலர்போல் வரு நாள் பிறவற்க’ (திருக்கோவை - 44) என்ற தொடராகும். இது,

பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம்

பிறவா நாளே (6-1-1) எனவரும் திருத்தாண்டகத் தொடரை உளங்கொண்டு கூறியதாகும்.

உலகங்ளெல்லாம் அழியவரும் ஊழிக்காலத்திலும் அழிவின்றி நின்று நிலவும் முழுமுதற் கடவுள் தில்லைக் கூத்தளுகிய சிவபெருமானே என்னும் உண்மையினை அறி வுறுத்தும் நிலையில் அமைந்தது,

விண்ணே மடங்க விரிநீர் பரந்து வெற்புக்கரப்ப 66ಒr -ಹೊ ಹ್ಯ வருமொரு காலத்தும் மன்னிநிற்கும் அண்ணல் மடங்கலதள் அம்பலவன் (திருக்கோவை -75)

எனவரும் திருப்பாடலாகும். இது,