பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரமும் திருக்கோவையும் 327

தில்லையம்பலவகிைய இறைவன் எல்லாப் பொருட்கும் மேலாகிய விண்ணுக்கு மேலும் எல்லாப் பொருட்கும் கீழாகிய பாதலத்தின் கீழும் கடல் சூழ்ந்த இந்நிலவுலகின் நடுவிலும் ஆக இவ்வாறு யாண்டும் நீக்கமறக் கலந்து விளங்குந் திறத்தினை,

விண்ணுக்கு மேல் வியன் பாதலக்கீழ் விரிநீருடுத்த மண்ணுக்கு காப்பண் நயந்து தென்றில்லை நின்ருேன் (162) எனவரும் திருக்கோவையில் அடிகள் விரித்துக் கூறி யுள்ளார். இத் தொடர்,

விண்ணகத்தான் மிக்க வேதத்துளான் விரிநீருடுத்த மண்ணகத்தான் திருமாலகத்தான் (4-112-6)

எனவரும் திருவிருத்தத்தினை அடியொற்றியமைந்ததாகும்.

எல்லாப் பற்றுக்களையும் அறவே துறந்த சிவஞானிகள் அறிந்து பற்றுதற்குரிய பெரும் பொருளாகத் திகழ்பவன் தில்லைச் சிற்றம்பலவன் என்பதனை,

பற்ருென்றிலார் பற்றுந் தில்லைப்பரன் (திருக்கோவை -178)

எனவரும் தொடரில் அடிகள் குறித்துள்ளார். இக்குறிப்பு,

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்

அருமருந்தை யகன் ஞாலத் தகத்துட் டோன்றி வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு

வான்புலன்க ளகத்தடக்கி மடவாரோடும் பொருந்தனைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்

பொது நீக்கித் தனை நினைய வல்லோர்க் கென்றும் பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே (6–1–5) எனவரும் திருத்தாண்டகப் பொருளையும்,

பற்றற்ருர் சேர் பழம் பதியை (4-15-1)

எனவரும் தொடரையும் சுட்டி நிற்றல் உணரத்தக்கதாகும்.

வளமாகிய நீர்த்துறையில் அமைந்த பொழிலிடத்தே

வாழும் வண்டினங்கள் பாணரை யொத்துப் பாட, அது கேட்ட புன்னைமரங்கள் தாதாகிய பசும் பொன்னைத் தன் னகத்தே கொண்ட போதாகிய வெண்கிழியைத் தந்து வள்ளலை யொத்து விளங்கிய காட்சியை,

பாணிகர் வண்டினம் பாடப் பைம்பொன்தரு வெண் கிழிதஞ் சேணிகர் காவின் வழங்கும் புன்னைத்துறை

(திருக்கோவை - 183)