பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாக் திருமுறை

திருமாளிகைத் தேவர் முதல் சேதிராயர் ஈருகவுள்ள அருளாசிரியர் ஒன்பதின்மரும் திருவாய்மலர்ந்தருளிய இருபத்தெட்டுத் திருப்பதிகங்களைத் திருவிசைப்பா என்றும் சேந்தனர் பாடிய பல்லாண்டிசையினைத் திருப்பல்லாண் டென்றும் வழங்குதல் மரபு. இவற்றைத் திருவிசைப்பா மாலை யென ஒன்ருக வழங்குவர் திருமுறைகண்ட புரான ஆசிரியர். சைவத் திருமுறை பன்னிரண்டினுள் எட்டாந் திருமுறையாகத் திகழும் திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை யென்பவற்றை யடுத்து ஒன்பதாந் திருமுறை யென முறை செய்து போற்றுஞ் சிறப்பியல்பு திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகிய இத் திருப்பதிகங்களுக்கு உரிய தாகும். ஒன்பதாந் திருமுறையில் இருபத்தொன்பது திருப்பதிகங்கள் உள்ளன. தேவாரத் திருப்பதிகங்களைப் போன்று இசைநலம் வாய்ந்தன. இத் திருப்பதிகங்களாத லின் இவை திருவிசைப்பா என வழங்கப் பெறுவனவாயின. இத் திருமுறையின் இறுதியிலுள்ள இருபத்தொன்பதாந் திருப்பதிகம், எங்கும் நீக்கமறக் கலந்து விளங்கும் எல்லாம் வல்ல இறைவனுக்குப் பல்லாண்டிசை கூறி வாழ்த்துவ தாகலின் திருப்பல்லாண்டு என்னும் சிறப்புப் பெயரைப் பெறுவதாயிற்று. இவ்வொன்பாதாந் திருமுறை முந்நூற் ருெரு பாடல்களையுடையதாய் அளவிற் சிறியதாயினும் திருக்கோயில் வழிபாட்டிற் பஞ்சபுராணமென ஒதப்பெறும் திருமுறைப் பாடல்கள் ஐந்தினுள் திருவிசைப்பாவில் ஒன்றும் திருப்பல்லாண்டில் ஒன்றுமாக இரண்டு திருப் பாடல்களை இத்திருமுறையிலிருந்து ஒதிவருகின்றனர். இவ்வழக்கம், இத்திருமுறையில் மக்களுக்குள்ள ஈடு பாட்டினை நன்கு புலப்படுத்துவதாகும்.

திருவிசைப்பா - திருப்பல்லாண்டு என்னும் இத் திருப் பதிகங்களைப் பாடிய ஆசிரியப் பெருமக்கள் வாழ்ந்தகாலம், முதல் ஆதித்த சோழன்முதல் கங்கை கொண்ட சோழன் இறுதியாகவுள்ள சோழ மன்னர்களின் ஆட்சிக்காலம் என்பது, இவற்றின் பொருளமைதியால் இனிது விளங்கும் தேவார ஆசிரியர்கள் அருளிய பதிகப்பெருவழியை கடைப்பிடித்துச் சிவபரம் பொருளே வழிபட்டுப் போற் முகமாகத் தாம்பெற்ற உள்ளத்திண்மையால் தமி