பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

பன்னிரு திருமுறை வரலாறு


என்பதும் கண்டு கொள்க ! எனச் சிவப்பிரகாச வுரையில் மதுரைச் சிவப்பிரகாசர் கூறும் விளக்கம் இங்கு உளங் கொளத்தக்கதாகும்.

மிகுந்த சிவஞானத்துள்ளே தம் அறிவானது அடங்கிச் சிவத்தோடு இரண்டறக் கலந்து காணும் இக்காட்சியையே உபநிடதங்கள் சோகம் பாவனை எனவும் சித்தாந்த மாமறையாகிய ஆகமங்கள் சிவோகம் பாவனை எனவும் கூறும். இந்நுட்பம்,

மன்னிய சோகமாம் மாமறையாளர்தம் சென்னிய தான சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. (2403) எனவரும் திருமந்திரத்தாற் புலம்ை.

தம்மைப் பிணித்துள்ள பசுத்தன்மை பாசத் தன்மை களை அறுத்து இறைவன் தன் திருவடிக்கண்ணே தம்மைப் பிரிவறச் சேர்த்துக் கொண்டதனையும் அங்ங்னம் தமக்குத் திருவடி நல்கியதே தம்மைச் சிவமாக்கி யாண்டமை யாதலையும்,

" பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசமறுத்தருளி

சித்தமென் னுந் திண் கயிற்ருல் திருப்பாதங் கட்டுவித்த வித்தகர்ை #4 (திருவாசகம். கண்ட-6) எனவும,

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட, அத்தன் எனவும் வரும் தொடர்களில் திருவாதவூரடிகள் தெளிவாகக் குறித்துள்ளார். ஆன்மா இங்ங்னம் சிவத் தோடு ஒன்றியியைந்து சிவமாகிய நிலையிலும் இறைவனுக் குரிய ஐந்தொழிலியற்றல் முதலிய தொழிலினைச் செய்யாத தாய் அம்முத்தி நிலையிலும் இறைவனுக்கு அடிமையாய்ச் சிவாநுபவம் ஆகிய நுகர்ச்சி யொன்றிற்கே யுரியதாம் என்பது, சிவமாக்கி’ என்ற அளவிலமையாது, என யாண்ட என அடிகள் விதந்து கூறும் சொற் குறிப்பால் இனிது புலனும்.

உம்பர்பிரான் உற்பத்தியாதிகளுக்குரியன்

உயிர் தானும் சிவாநுபவம் ஒன்றினுக்கு முரித்தே

சிவஞான சித்தியார் - சுபக்கம் 319) எனவரும் அருணந்தி சிவாசாரியார் வாய்மொழி இங்கு நினைத்தற்குரியதாகும்.