பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

பன்னிரு திருமுறை வரலாறு


நாட்டில் அயலாரது ஆட்சியை அகற்றி மீண்டும் சோழர் பேரரசை நிறுவியபெருமை பிற்காலச் சோழர்களுக்குரிய தாகும். இங்ங்னம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியில் தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு தோன்றிய சோழர் பேரரசு, கங்கை நதி பாயும் வடநாட்டிலும் கடல் கடந்த கடாரம் முதலிய பிறநாடுகளிலும் புகழுடன் பரவி நிலைபெற்ற காலம் கி. பி. பத்தாம் நூற்ருண்டும் பதினுென் ரும் நூற்ருண்டும் என்பது சரித்திரம் வல்லார் அறிந்த தொன்ரும். இங்ங்ணம் பிற்காலச் சோழ மன்னர்கள் இவ்வுலகிற் பெறற்கரும் வெற்றியைப் பெற்றுச் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பொற்காலமே இத்திருவிசைப்பாத் திருமுறை தோன்றிய நற்காலமாகும். இத் திருமுறையானது தெய்வங் கொள்கையாகிய சிவநெறியினல் தமிழ் வேந்தர் பெற்ற வெற்றியையும் அவ்வெற்றியின் விளைவாகத் தமிழகத்தார் பெற்ற அமைதி நிலையையும் அவ்வமைதியை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தோங்கிய சைவ சமயத்தின் உயர்ச்சியையும் நன்கு விளக்குந் திருவரு எளிலக்கியமாகத் திகழ்கின்றது.

தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனுல் அத்திருக்கோயிலின் கண்ணே ஆடல் பாடல் நிகழ்த்துவதற்கென நியமிக்கப் பெற்ற தளிச்சேரிப் பெண்டுகளிற் சிலர், நீறணி பவளக் குன்றம், எடுத்த பாதம், மழலைச் சிலம்பு என இத் திருவிசைப்பாப் பாடல்களில் அமைந்த சொற்ருெடர் களையே தமக்குரிய பெயராகப் பெற்றுள்ளனர். இவ்வாறே தருணேந்து சேகரன் முதலிய திருவிசைப்பாத் தொடர் களும் மக்களுக்குரிய பெயராக வழங்கப்பெற்றுள்ளன. இப்பெயர் வழக்கத்தை யூன்றிநோக்குமிடத்து முதலாம் இராசராசனது ஆட்சிக்காலத்து இத்திருவிசைப்பாவுக்கு அமைந்த தனிச் சிறப்பு இனிது புலளுகின்றது.

திருவிசைப்பாப் பெற்ற திருத்தலங்கள் தில்லைச் சிற்றம்பலம், திருவிழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக் கழி, திருக்களந்தையாதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டுர் மணியம்பலம், திருமுகத்தலே, திரைலோக்கியசுந்தரம், கங்கைகொண்டசோழேச்சரம், திருப்பூவணம், திருச் சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடை மருது, திருவாரூர் எனப் பதின்ைகு தலங்களாகும்.