பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை

வேதங்களை முறைப்படி ஒதியுணர்ந்த கருவூர்த் தேவர் தமது தாய் மொழியாகிய தமிழின் இனிமையினையும் எப் பொருளையுந் தெளிய அறிவிக்குந் தெளிவுடைமையினையும் நன்கு தேர்ந்து அமிழ்தினுமினிய தமிழ்ப் பாடல்களின் சுவை நலங்களைத் துய்த்து மகிழ்ந்தார். தமக்குமுன் வாழ்ந்த அருளாசிரியர்கள் இறைவனைப் போற்றி உள முவந்தபோதெலாம் உகந்துகந்து பாடிய செழும் பாடல் களைக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஓதி இன்புற்ருர், இளமை, யாக்கை, செல்வம் என்பன என்றும் ஒரு நிலையில் நிற்பன அல்ல எனத் தெளிந்தார். நிலையா வாழ்க்கையில் ஈடுபடுவனல்லேன் எனத் துறவறமாகிய தூய நெறியினை மேற்கொண்டார். இறைவன் எழுந்தருளிய திருத்தலங்கள் தோறுஞ் சென்று அப்பெருமானை வழிபட்டுப் போற்றுதலே இம் மக்கட் பிறவியாற் பெறும் பெரும்பயனெனக் கருதி யொழுகி னுர். எல்லாம் வல்ல கடவுளை வாயாரப் பாடிப் போற்றுந் தொண்டர் கூட்டத்திலே கடவுளைக்கண்டு இன்புறலாமென்றும், இறைவனது பொருள்சேர்புகழை இனிய இசைத் தமிழ்த் திறத்தாற் பாடிப் போற்றும் மெய்யடியார்கள் கூட்டத்தைவிட்டு இறைவன் கணப் பொழுதும் பிரிந்துறைதல் இல்லை யென்றும் முன்னைப் பெரியோர்கள் பாடிய பாடற் பொருளை உளங் கொண்டு மெய்யடியார் கூட்டத்திற் கலந்து நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பி இறைவனை வழிபடுவதனையே தமக்குரிய சிறந்த கடமையாகக் கொண்டொழுகினர்.

பகற்பொழுதெல்லாம் இறைவனை 'இனிய தமிழாற் பாடிப் பரவுதலும் எல்லோரும் அயர்ந்து கண்ணுறங்கும் நள்ளிருட்பொழுதில் ஓரிடத்து உயிராவண்ணம் அமர்ந் திருந்து தம் உயிர்க்குயிராகிய இறைவனை யுற்றுநோக்கி உள்ளமாகிய கிழியிலே அப்பெருமானது திருவுருவை ஒவியமாக எழுதிப்பார்த்துச் சிவயோக நெறியில்

1. கண்பனியரும்பக் கைகள் மொட்டித்தென் களைகணேயோலமென் ருே லிட்டு என் பெலாம் உருகும் அன்பர் தங் கூட்டத்து

என்னையும் புணர்ப்பவன் .

-(கோயில்-திருவிசைப்பா-5)

என இவ்வாசிரியர் தமது அநுபவத்தைக் கூறுதல் காண்க.