பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

பன்னிரு திருமுறை வரலாறு


வெய்ய செஞ்சோதி என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் திருவிடை மருதில் எழுந்தருளிய இறை வனப் போற்றியதாகும். இதன்கண் எல்லோரும் கண்ணயர்ந்துறங்கும் நள்ளிருட்பொழுதில் இறைவன் அம்மையப்பகை எழுந்தருளிக் காட்சி தந்து தம்முள் ளத்திற் புகுந்தருளிய சிவயோக அநுபவநிலையைக் கருவூர்த்தேவர் குறிப்பிட்டுப்போற்றும் முறை படித்து இன்புறத்தக்கதாகும்.

அழகின்கண்ணே ஆழ்ந்த செயற்றிறம் வாய்ந்த சுடப்படாத பசுமண் பாண்டமானது, மழையினது மெல்லிய துளிபட்ட அளவே கரைந்து சிதையும். அப் பாண்டம் அழலின்கண் ஆழ்ந்து கிடந்து சூளையிற் சுடப்பட்டால் எத்தனையாண்டுகள் தண்ணிருள் அழுந்திக்கிடந்தாலும் கரையாது. அதுபோல, பெண்டிரது முயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் தமது உரனில்லாத நெஞ்சம், மெல்லிய மழைத்துளிபோன்ற சிறிய துன்பங்கள் வந்த அளவிலேயே தன் நிலை கலங்கியழியும் நிலைமையதாயினும், இறைவனது திருவருட்பெருந்தீயில் ஒடுங்கியாழ்தலால் நன்ருகப் பக்குவப்பட்டு உருவாகி உலகியலில் எத்தகைய இடர்கள் வந்தாலும் அவற்ருல் நில கலங்காத் தன்மையடையும்படி இடைமருதீசன் தம்மை ஆட்கொண்டருளினன் என்பதனை,

எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்

இன்றுளிபட நனைந்துருகி அழலையாழ் புருவம் புனலொடுங்கிடந்தாங்

காதனேன் மாதரார் கல வித் தொழிலையாழ் நெஞ்சம் இடர் படா வண்ணந்

தூங்கிருள் நடு நல்யாமத்தோர் மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்

மருவிடந் திருவிடை மருதே. என வரும் அழகிய பாடலிற் கருவூர்த்தேவர் சுவைபெற விரித்துரைத்துள்ளார்.

முதலாம் இராசேந்திரனுகிய கங்கைகொண்ட சோழன், தான் எடுப்பித்த கங்கைகொண்ட சோழேச்சரத் திருக்கோயில் விமானத்தின் தென்கீழ்ப் பகுதியில் தனக்கு அருளாசிரியராய்த் திகழ்ந்த இக்கருவூர்த்தேவரது திரு உருவத்தைக் கல்லோவியமாக அழகுபெறச் செய்தமைத்து

1. பெயல்நீர்க்கேற்ற பசுங்கலம், குறுந்-29