பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 பன்னிரு திருமுறை வலோ மு:

பத்தியா புணர்வோர் அருளை வாய்மடுத்துப் பருகுதோ றமுதமொத் தவர்க்கே

தித்தியா விருக்குந் தேவர்கா ளிவர் தந்

திருவுரு விருந்தவா பாரீர்

சத்தியாய்ச் சிவமா புலகெலாம் படைத்த

தனி முழுமுதலுமா யதற்கோச் வித்துமா யாரு ராதியாய் வீதி

விடங்கராய் நடங்குலாவினரே. என்ற பாடல் படிக்குந்தோறுஞ் சுவைதருவதாய்ப் பூந்துருத்திநம்பிகாடநம்பி பெற்ற சிவாநுபவப் பயனைப் புலப்படுத்துகின்றது.

இவர் பாடிய கோயிற்றிருவிசைப்பா சாளரபாணி என்ற பண்ணுக்குரியதாக இசையமைக்கப்பெற்றது. தில்லையம்பலம் எல்லாம்வல்ல சிவபெருமான் ஆடல்புரியும் நாடக அரங்காக விளங்கிய பேரழகினை விரித்துரைப்பது இத்திருப்பதிகம். இதன்கண் 2-ம் பாடல் முதல் 5-ம் பாடல் வரையுள்ள நான்கு திருப்பாடல்களும் கண்ணப்பர், கணம்புல்லர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சேரமான் பெருமாள், நம்பியாரூரர் ஆகிய பெருமக்களுக்குத் தில்லையம்பலவன் உயர்ந்த வீடுபேருகிய பேரின்பத்தை வழங்கித் தில்லைச்சிற்றம்பலத்தில் குடிவாழ்க்கை கொண்டு விளங்கும் அருட்பண்பினை உளமுருகிப் போற்றுவனவாக அமைந்துள்ளன. இத் திருப்பதிகங்கள் இரண்டும் கண்டராதித்தர் திருவிசைப்பாவுக்கு முன் வரிசைப்படுத்தப் பட்டிருத்தலால் நம்பிகாடநம்பிகள் வாழ்ந்த காலம் கண்ட ராதித்த சோழரது ஆட்சிக்காலமாகிய கி.பி. பத்தாம் நூற்றண்டின் இடைப்பகுதியெனக்கொள்ளுதல் பொருத்த மாகும்.

இனி, முதல் இராசா திராசனது 32-ஆம் ஆட்சி ஆண்டில் (கி. பி. 1050) பொறிக்கப்பட்ட திருவையாற்றுக் கல்வெட்டொன்றில் " ஆத்திரேய கோத்திரத்து நம்பிகாட நம்பி " என்ற அர்ச்சகர் பெயர் காணப்படுதலாலும் இக் கல்வெட்டுத் திருப்பூந்துருத்தியையடுத்த திருவையாற்றுக் கோயிலிற் பொறிக்கப்பட்டிருத்தலாலும் இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட நம்பிகாடநம்பியே திருவிசைப்பாப்பாடியவர் என்று நினைக்க இடமுண்டென்பர். திருவிசைப்பா

1. திரு. மா. இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி. பக். 72.