பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

பன்னிரு திருமுறை வரலாறு


நின்று சேரமானேடு கூடிய ஆரூரன் எனச் சிறப்பிக்கும் விசேடணமாகவும் நிற்றலால் சேரமான் வெள்ளான மேற்சென்ருர் என்றல் இவ்வாசிரியர் கருத்தன்றென்பது விளங்கும். களேயாவுடலோடு செல்லுதல் சேரமானுக்கும் ஆரூானுக்கும் .ெ து வ கி ய நிகழ்ச்சியென்றும் வெள்ளான்மேல் செல்லுதல் ஆரூரனுக்கே உரிய சிறப்பு உடைய நிகழ்ச்சி என்றும் கொள்வதே நம்பிகாடநம்பியின் கருத்துக்கு ஏற்புடையதாகும்.

டு. கண்டராதித்தர்

தில்லைச்சிற்றம்பலத்தில் திருநடம் புரிந்தருளும் கூத்தப்பெருமான் திருவடிகளிற் பெரிதும் ஈடுபாடு உடையராய் ' மின்னுருவ மேல் விளங்க” என்ற முதற் குறிப்புடைய திருவிசைப்பாத் திருப்பதிகத்தை அருளிச் செய்தவர் கண்டராதித்தர் என்னும் ஆசிரியராவர். இவர் சோழர் குடியிற் பிறந்து முடிவேந்தராய் ஆட்சி புரிந்தவர். இச்செய்தி

சீரான்மல்கு தில்லைச்செம்பொன் அம்பலத்தாடி தன்னக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த ஆராவின்சொற் கண்டராதித்தன் அருந்தமிழ்மாலை என வரும் இப்பதிகத் திருக்கடைக்காப்பினுற் புலனும். இதன் கண் கோழிவேந்தன், தஞ்சையர்கோன் எனத் தம்மைப்பற்றி கூறுங் குறிப்பினுல் இவர் தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டை ஆட்சிபுரிந்த முடி வேந்தர் என்பது இனிது புலனுதல் காண்க.

கண்டர் என்பது சோழ மன்னர்களுக்குரிய பொதுப் பெயர். - ஆதித்தன் என்பது இவரது இயற்பெயராகும். மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரிவன்மராகிய முதற் பராந்தக சோழரது இரண்டாம் புதல்வராகக் கண்டராதித்தர் பிறந்தருளினர். இவர் இராசகேசரி என்ற பட்டத்துடன் கி. பி. 93 முதல் 957 வரை சோழ நாட்டை ஆட்சிபுரிந்துள்ளார். திருச்சிராப்பள்ளி ஜில்லா வில் திருமழபாடிக்கு மேற்கே ஒருகல் தொலைவிலுள்ள கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற ஊர் இவராற் புதுவதாக அமைக்கப்பெற்றதாகும்.' இவர் தம் பெயரால்

1. பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி 1 பக்கம் 60.