பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை $89.

கண்டராதித்தப் பேரேரி என்ற நீர்நிலை யொன்றை அமைத்த செய்தி தென்னுர்க்காடு ஜில்லா உலகபுரத்துக் கல்வெட்டாற் புலளுகிறது.

கண்டராதித்தர்க்கு வீ ர ந | ர னி, செம்பியன் மாதேவி என இரு மனைவியர் இருந்தனர். இவர்களுள் முதல் மனைவியாய் விளங்கிய வீர நாரணி என்பார் கண்ட ராதித்தர் முடிசூட்டப் பெறுதற்கு முன்னரே இறந்தனர். இவர் முடிசூடியபின் பட்டத்தரசியாகத் திகழ்ந்தவர் இரண்டாம் மனைவியாகிய செம்பியன்மாதேவியாரேயாவர். * மழவரையர் மகளார் பூரீ கண்ட ராதித்தப் பெருமாள் தேவியார் செம்பியன் மாதேவியார் ' எனவரும் கல் வெட்டுப் பகுதியால் இவ்வம்மையார் மழவர் குடும்பத்திற் பிறந்தவரென்று தெரிகின்றது. கண்ட ராதித்தர்க்கு இவ்வம்மையார்பாற் பிறந்த புதல்வர் பூரீ மதுராந்தக தேவரான பூநீ உத்தம சோழரென்பார்.

கண்ட ராதித்தர் தில்லைக் கூத்தப்பிரானிடத்து நிறைந்த பேரன்புடையவர். செந்தமிழ்ப் புலமை வாய்ந்தவர். இவ்வேந்தர் பெருமான் தில்லையம்பலவனைப் போற்றிப் பரவிய திருவிசைப்பாத் திருப்பதிகம் படிப்போ ருள்ளத்தை .ெ ந கி ழ் வி த் து த் தில்லையம்பலவனது ஆடல் கண்டின்புறும் பெருவேட்கையைத் தோற்றுவிப்ப தாகும். இதன் கண் பத்துப் பாடல்கள் உள்ளன. மின்னற் கொடிகள் மேலே விளங்க வெண்கொடி கட்டிய மாளிகைகள் சூழ்ந்து நிற்கப் பொன்மலையொன்று வந்து நின்ருற்போன்று தில்லையிற் பொன்னம்பலம் விளங்குவ தும், தில்லை வாழந்தணர்களாகிய மூவாயிரவர் நான்மறைக ளோதி முத்தீவள த்துக் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு செய்வதும், திருமால் தில்லேயம்பல முன்றிலிலே கூத்தப் பிரானது திருவருளே வேண்டி வரங்கிடப்பதும், பதஞ்சலி முனிவர் வேண்டுகோட்கிணங்கி இறைவன் என்றும் தில்லையிற் கூத்தியற்றுவதும் ஆகிய செய்திகள் இத்திருப் பதிகத்திற் கூறப்பட்டுள்ளன. பாண்டி நாட்டையும் ஈழ நாட்டையும் வெற்றி கொண்ட பெரு வீரமும் சிறந்த சிவபத்திச் செல்வமும் வாய்க்கப்பெற்ற முதற் பராந்தக

3. பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி, 1, பக் ேே. 2. S. H. I., WQL, IHI. No. 141.