பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

பன்னிரு திருமுறை வரலாறு


தின் திருவருளுண்மையை ஆராய்ந்து தெளியாத புறச் சமயத்தவர் கண்முன்பு நின் திருவருளை நம்பிய அடியேன நோய்கள் பெரிதும் வருத்துதலால் அவ்வருத்தத்தைக் கண்ட புறச்சமயத்தவர்கள், தொண்டனுகிய இவனை இவனுற் போற்றப்பெறும் இறைவனே இகழ்கின்ருன் என்று நின்னைப் பழிதுாற்றுதற்கு நாயேனைக் கருவியாக

வைத்துவிட்டாய் என்பதுபட,

ஆயாத சமயங்க ளவரவர்கண் முன்பென்னை

நோயோடு பிணிநலிய விருக்கின்ற வதஞலே

பேயாவித் தொழும்பனைத்தம் பிரான் இகழு மென்பித்தாய்

நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலு நம்பானே ' என இவ்வாசிரியர் இறைவனை நோக்கி முறையிடும் நிலையி லமைந்த பாடல், பிணி முதலிய துன்பங்களுக்கு உளம் வருந்து மியல்பு இவர் பால் இல்லை யென்பதையும், இறைவன் திருவருளில் நம்பிக்கையில்லாதார் சிலர் அடியார்களது உடற் பிணியை எடுத்துக்காட்டி இறைவ னுண்மையை மறுத்தற்கு இடனுயிற்றென்ற ஒரு நிலைக்கே இவர் வருந்துகின்ருரென்பதையும் புலப்படுத்து வதாகும்.

தில்லையில் நடம் பயிலும் பெருமானே, பத்தரடித் தொண்டளுகிய இவன் இன்னிசைத் தமிழ்ப்பாடல்களைப் பாடி என்னை இடையீடின் றி யழைக்கின்ருன் எனக்கருதி எனக்கு அருள் புரிந்தனையாயின் நின் செயல் இருவர்க்கும் நன்ருய் முடியும். அங்ங்ணம் நீ அடியேற்கு அருளா தொழிந்தால் நின்னை யடைதற்குத் தடையாயுள்ள இவ் வுடலைத் துறந்து இறந்தேனும் நின்னைக் காண்பதென்று முடிவு செய்துவிட்டேன். இம்முடியினை இனி நின்னல் தடுத்தலியலாது என்பதுபட,

  • பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டனெடுத்

தோவாதே யழைக்கின்ரு னென்றருளின் நன்றுமிகத் தேவேதென் றிருத்தில்லைக் கூத்தாடி நாயடியேன் சாவாயும் நினைக்காண்ட லினியுனக்குத் தடுப்பரிதே' என இவ்வாசிரியர் இறைவனை நோக்கிக் கூறும் அறிவிப்பு, மூவாமுழுப்பழி மூடுங்கண்டாய் எனவருந் திருநாவுக் கரசர் வாய்மொழியை நினைவுபடுத்துவதாய் இவரது உள்ளத்துறுதியைப் புலப்படுத்தல் காணலாம்.