பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

பன்னிரு திருமுறை வரலாறு


" தேய்ந்து மெய்வெளுத் தகம்வளைந் தரவினை யஞ்சித்தா

னிருந்தேயும் காய்ந்து வந்துவந் தென்றனே நலிசெய்து கதிர்நிலா

எரிதுரவும் ' எனத் தனக்குச் சந்திரன் செய்யும் தீங்கினை யெடுத் துரைக்கும் பகுதி, தமது உடல்நலக் கேட்டையும் இகழ்ச்சி யையும் பொருட்படுத்தாது பிறர்க்குத் தீங்கு செய்வ தனையே தமது கடமையெனக் கொள்ளும் கீழோரது

இயல்பினைச் சுவை பெற விளக்குகின்றது.

அல்லாய்ப் பகலாய் ' எனத் தொடங்கும் பதிகம், அருவாயுருவாய் ஆராவமுதமாய்த் திகழும் இறைவன் பதஞ்சலி முனிவர் பரவத் தென்னன் தமிழும் இசையுங் கலந்த தில்லைச் சிற்றம்பலத்திற் பல்லாயிரவர் கான வெளிப்பட்டு, நந்தி முழவங் கொட்டவும் ஆரூர் நம்பி இசை பாடவும் உமையம்மையார் கண்களிக்கத் திருநடஞ் செய்தருளும் அழகிய தோற்றத்தை உளங்கொள விரித் துரைக்கின்றது. இங்கே ஆரூர் நம்பி யென்றது நம்பியாரூர ராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளே. இப்பதிகத்தின் ஐந்தாம் பாடலில் வாமத்தெழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம் பார்க்க எனவருந் தொடர் கூத்தப்பெருமான் எழில் மிகத் தூக்கிய திருவடியாகிய இடப்பாதம் உமையம்மையார்க் குரியதாதலின் அதனை எழிலார் எடுத்த பாதம் என் றும் அதன்மேல் அணியப் பெற்ற மென்சிலம்பினை மழலைச் சிலம்பென்றும் இவ்வாசிரியர் போற்றியுள்ளார். இச்சொற் ருெடர்களின் அழகில் ஈடுபட்ட மக்கள் இத்தொடர்களைத் தம் மக்கட்குரிய பெயராக இட்டு வழங்கியுள்ளார்கள். முதலாம் இராசராச சோழனுல் தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடல் பாடல் நிகழ்த்துதற்கென நியமிக்கப்பெற்ற தளிச் சேரிப் பெண்டுகளிற் சிலர் எடுத்த பாதம், மழலைச் சிலம்பு என இத்திருவிசைப்பாத் தொடர்களைத் தமக்குரிய பெய ராகப் புனைந்து கொண்டுள்ளார்கள். இக்குறிப்பினை நோக்குங்கால் இத்தொடர்களை முதன்முதல் வழங்கிய திருவாலிய முதனர் முதல் இராசராசன் காலத்திலோ அன்றிச் சிறிது முன்னே இவ்வுலகில் வாழ்ந்தவரென்பது நன்கு பெறப்படும்.

இறைவனைக் காதலித்த இளையாளொருத்தியின் கூ ற் ருக அருளிச் செய்யப்பட்டது கோல மலர் நெடுங்கண்