பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 பன்னிரு திருமுறை வரலாறு

அவர் வாழ்ந்த காலம் பற்றியும் ஊகித்து ஆராய்ந்து முடிவு கூறுவாருமுளர். இவர்களது ஆராய்ச்சியிற் கண்ட முடிபுகள் இவர்தம் கருதலளவையின் துணை கொண்டே வெளியிடப் பெற்றனவெனக் கொள்ளவேண்டியுளது.

திருமூலராகிய சிவயோகியார் முந்தைய உடம்புடன் இருந்த காலத்து அவர் பிறந்த நாடு ஊர் குடி, பெற்ருேர் முதலிய வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துத் திருத் தொண்டர் புராண ஆசிரியராகிய சேக்கிழாரடிகள் திருமூல நாயனுர் புராணத்தில் ஒன்றும் கூறவில்லை. திருக்கயிலா யத்தில் நந்தி திருவருள் பெற்ற நான் மறையோகிகள் ஒருவர் ; அவர்தாம் அணிமாதி சித்தி பெற்றுடையார் ; குறுமுனிபால் உற்றதொரு கேண்மையில்ை உடன் சில நாள் உறைவதற்கு நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார் ' என்ற அளவே சிவயோகியாரது முன்னையுடம்பிற்குரிய வரலாற்றுக் குறிப்புக்களைச் சேக் கிழார் குறித்துள்ளார். திருமூலராகிய சிவயோகியார் முந்தையுடம்புடன் இருந்த காலத்து அவர்க்குப் பெற்ருேர் இட்ட பெயர் சுந்தரன் என்பதாம் எனத் துடிசைக் கிழா ரவர்கள் துணிந்து கூறு தற்குச் சான்ருக அமைந்தது,

வந்த மடமேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின் முந்தியுதிக்கின்ற மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரஞ் சுந்தர வாகமச் சொல்மொழிந்தானே. (திருமந்திரம் -101)

எனவரும் திருப்பாடலாகும். இது திருமந்திரத்திற் குரு மட வரலாறு என்னுந் தலைப்பிலுள்ள இரண்டு பாடல் களுள் ஒன்று. இது திருமூலர் வாக்கன்று என்பதும் திருமூலர் வழியிற் பின் வந்தோர் ஒருவர் அவரது நூலக் குறித்துக் கூறியதென்பதும் மூலன்...மொழிந்தான்' எனப் படர்க்கையில் அமைந்திருத்தலால் நன்கு துணியப் படும். இதன்கண் மூலன்...சுந்தர ஆகமச் சொல் மொழிந் தானே என்ற தொடரில் உள்ள சுந்தர என்ற சொல் சுந்தர ஆகமம் என ஆகமத்துக்கு அடைமொழியாய் இறைவனருளிய திவ்யாகமம் என்னும் சிறப்புணர வந்த தாகும். ஆகவே இதனைத் திருமூலரது முந்தையாக்கையிற்

1. துடிசைக்கிழார் அ. சிதம்பரரைவர்கள் எழுதிய திருமூலர் வரலாறு நோக்குக.