பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு 盛2密

பெற்ருேர் இட்ட பெயர் எனத் துணிந்து கூறுதல் சிறிதும் பொருந்தாது. இப்பாடலின் நான்காமடிக்கு உரியதாக அவர் கொண்ட சுந்தரனுகமச் சொல் மெ ழிந்தானே : என்ற பாடம் எந்தச் சுவடியிலும் இருப்பதாகத் தெரிய வில்லை. அவ்வாறு பாடங்கொண்டாலும், சுந்தரன் ஆகமம் என்ற தொடர் க்குச் சுந்தரளுகிய சிவபெருமா ஞல் அருளிச் செய்யப் பெற்ற ஆகமம் எனப்பொருள் கொள்ளுதலே ஏற்புடையதாகும்.

வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவாயிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது வைத்த சிறப்புத் தருமிவை தானே.

(திருமந்திரம் - பாயிரம் -100) எனவரும் திருப்பாடல் திருமந்திரப் பொருளின் சிறப்பினை அறிவுறுத்துவதாகும். நன் னுாலாகிய சிவாகமங்களில் நிரல்பட வைத்து ஒதிய முறையானே முத்தியின் முடிந்த பொருளாகிய சைவ சித்தாந்தமாகிய இது, தமிழ் மூவாயிர மாகிய இந்நூலிலே விளங்கக் கூறப்பட்டதாகும். முன்னுள்ள ஆகமங்களைச் சிந்தையிற் கொண்டு அறிவிளுல் ஆர் ாய்ந்து அருளிச் செய்யட் பெற்ற இம் மூவாயிரம் திருப் பாடல்களும், உலகியல் வேத நூலொழுக்கமாகிய பொது வும் நிலவு மெய்ந்நெறியாகிய சைவத்தின் சிறப்பும் ஆகிய இவ் விருதிறப் பொருள் களையும் தரும் என்பது இதன் பொருள்.

திருமந்திர நூலமைப்பு

திருமூலநாயனர் அருளிய திருமந்திரம் தமிழாகமமாக விளங்குதலை யாவரும் அறிவர். சிவாகமங்கள் , தந்திரம், மந்திரம், உபதேசம் என மூவகை உரையளவைகளையும் உறுப்பாகக்கொண்டன. அவற்றுள் தந்திர கலையாவது, வேத ஆகமங்களின் வகையாகிய கருமகாண்டம் ஞான காண்டம உபாசன கான ட எனனும மூவகைகளுள கரும காண்டம் பற்றிப் பின்னெடுமுன் மாறுகோளின்றி அனுட் டித்தலை அறிவுறுத்துவது. மந்திரகபே என்பது, உபாசன காண்டம் பற்றி மன முதலியன அடக்கித் தெய்வத்தை வழி படும் முறையினை விரித்துரைப்பது. உபதேசகலை என்பது, ஞானகாண்டம் பற்றித் தனக்கு முதலும் முடிவுமில்லாத