பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு 儘3薯

பூரீமந்த்ர மாலிகா என்ற பெயருடன் வடமொழியில் ஒரு நூல் இருப்பதாகவோ அன்றி ஒரு காலத்து இருந்த தாகவோ கொள்ளுதற்குரிய சான் றினை அவர் குறிப் பிடாமையும் ஈண்டு நோக்கத்தக்கது.

இறைவனுாலாகிய சிவாகமங்கள் இருபத்தெட்டென் பதும், அவை அம்முதல் வனது ஈசான முகத்திலிருந்து அருளிச் செய்யப்பெற்றன என்பதும்,

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (57) எனவரும் திருமந்திரத்தாற் புலனும். இறைவனருளிய ஆகமங்கள் இருபத்தெட்டிற்கு மேலும் எண்ணிலவாக உள்ளன என்பதும், அவ்வாகமப் பொருள்களை யெல்லாம் பல ஆண்டுகளாகச் சிந்தித்துணர்ந்ததன் பயனுகவே திருமூலர் இத்திருமந்திரத்தை அருளிச் செய்தார் என் பதும்;

அண்ணல் அருளால் அருளுஞ்சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூருயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. (58) எனவரும் அவரது வாய்மொழியாற் புலனும்.

இறைவனிடமிருந்து சத்தியும், சத்தியிடமிருந்து சதாசிவமும், அவர்பால் மகேசுரரும், அவரிடமிருந்து பூரீகண்ட உருத்திரரும், அவர்பால் திருமாலும், அவரிட மிருந்து பிரமதேவரும், அவரிடமிருந்து உருத்திரரும் இம் முறையே உபதேசம் பெற்றனரென்றும், இவர்கள் தனித் தனியே உபதேச வாயிலாகப் பெற்றுணர்ந்த காரணம், காமிகம் வீரம், சிந்தியம், வாதுளம், வியாமளம், காலேத் தரம், சுப்பிரம், மகுடம் என்னும் இவ்வொன்பது ஆகமங் கஃ யும் நந்தி பெருமான் இறைவனருளால் ஒருங்கு கைவரப்பெற்ருரென்றும், திருமூலதேவர் ஆகமச்சிறப்பினை அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில் தாம்பெற்ற நவ ஆகமம் எங்கள் நந்திபெற்ருனே. (62) என வும,