பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

பன்னிரு திருமுறை வரலாறு


களாகக் கொண்டு அவரது வரலாற்றினை விரித்துரைத்த சேக்கிழாரடிகளும் இக்குறிப்பினைத் தம் நூலில் தெளிவாக விளக்கியிருப்பர்.

நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டு புந்தியினுள்ளே புகப்பெய்து போற்றி செய்து அந்திமதிபுனை அரனடி நாள்தோறும் சிந்தை செய்தாகமஞ் செப்பலும் றேனே. (78) எனவும்,

ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை ஆரறிவார் இந்த அகலமும் நீளமும் பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே. (95) எனவும் திருமூல நாயனர் இந்நூற்பொருளைத் தாம் சிந்தித்துணர்ந்த அநுபவ மொழிகளில் வைத்து அருளிச் செய்திருத்தலானும், திருவாவடுதுறையில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்த திருமூல நாயனுர், உலக மக்கள் உய்திபெறுதல் வேண்டும் என்னும் பேர ருளால் தம் திருவுள்ளத்தே தோன் றிய எண்ணங்களை ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாகக் கொண்டு மூவாயிரந் திருப்பாடல்களை யுடைய தமிழ் முதல் நூலாகிய திருமந்திர மாலையைத் திருவாய்மலர்ந்தருளிய திறத்தின.

ஆவடுதண் டுறையணைந்தங் கரும்பொருளே யுறவணங்கி மேவுவார் புறக்குட பால் மிச் குயர்ந்த அரசின் கீழ்த் தேவிருக்கையர்ந்தருளிச் சிவயோகம் தலைநின்று பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்திருந்தார். ஊனுடம் பிற் பிறவிவிட ந் தீர்ந்துலகத் தோருய்ய ஞான முதல் நான் குமலர் நற்றிருமந்திாமாலை பான்மைமுறை ஓராண்டுக் கொன்ருகப் பரம் பொருளாம் ஏனவெயிறனிந்தாரை ஒன்றவன் ருன் என எடுத்து, முன் னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரஞ்சாத்தி மன்னிய மூவாயிரத் தாண் டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து சென்னிமதி யணிந்தார்.தந் திருவருளால் திருக்க யிலை தன் னிலனை ந் தொருகாலும் பிரியாமைத் தாள டைந்தார்.

(பெரிய - திருமூல. 24, 25, 26) என வரும் பாடல்களில் அருண் மொழித் தேவராகிய சேக்கிழார் நாயனர் தெளிவாக விளக்கியிருத்தலானும் செந் தமிழ் முதல்நூலாகிய இத்திருமந்திர மாலையை வடமொ ழி நூலொன்றின் மொழிபெயர்ப்பெனக் கருது தற்கு ஒரு சிறிதும் இடமில்லையெனத் தெளிக. அன்றியும்