பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

பன்னிரு திருமுறை வரலாறு


பெற்ற நல் லாகமங் காரணங் காமிகம் உற்ற நல் வீரம் உயர் சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம் துற்ற நற் சுப்பிரம் சொல்லு மகுடமே. t 63)

எனவும் வரும் திருமந்திரப் பாடல்காைகும். மேற்குறித்த ஒன்பது ஆகமங்களின் சாரலாகவே இந்நூல் ஒன்பது தந்திரங்க ையுடையதாய் அமைந்துளது எனக் கருதுவாரு முளர். இந்நூலில் உள்ள ஒன்பது தந்திரங்களும் முறையே ஒவ்வோ தாகமத்தின் சாரம் எனக்கொள்வதைக் காட்டிலும் திருமூலர் சிவாகமங்களின் நுண் பொருள்களை ஒன்பது தந்திரங்களாக வகைப்படுத்து மூவாயிரந் திருப் பாடல்களில் வைத்து உணர்த்தியது எரிஞர் எனக்கொள்

ளுதலே ஏற்புடையதாகும் என்பர் அறிஞர்.

சிவாகமங்கள், உண்மைப் பொருளைச் சரியை கிரியை யோகம் ஞானம் என நான்கு பாதங்களாக வகுத்துரைப் பன. இந்நூலில் வேதச்சிறப்பும் ஆக்மச்சிறப்பும் ஒருங்கே உணர்த்தப்பெற்றன. இவ்விருவகை நூல்களும் இறைவன் நூல்கள் எனவும், அவற்றுள் வேதம் பொதுநூல் ஆகமம் சிறப்பு நூல் எனவும் ஆசிரியர் விளக்குதலால், இந்நூலில் சிறுபான்மை வேதப்பொருளும் பெரும்பான்மையும் சிவாக மப்பொருளும் ஆக எடுத்தோதப் பெற்றன எனக்கொள் ளுதல் பொருந்தும். இந்நூலின் பெரும் பிரிவினைத் தந்திரம் எனவும் இவற்றுள் அடங்கிய திருப்பாடல்களை மந்திரம் எனவும் வழங்குதல் மரபு.

சிவாகமங்களின் ஞான பாதத்தில் உளவாகும் மலைவு தீர்த்தற் பொருட்டு இறைவர் அருளத் தாம் கேட்டுத் தெளிந்த நுண்பொருள்களை நந்திபெருமான் சனற்குமாரர் முதலிய முனிவர்களுக்கு உபதேசித்தருளினர். அவர் பால் உபதேசம் பெற்றவர் திருமூலர். நந்தி பெருமான்பால் தாம் உணர்ந்த சிவாகமப்பொருளைத் திருமந்திரங்களாக்கி அவற்றை ஒன்பது தந்திரங்களாக வகுத்துத் தமிழ் மூவா யிரமாக அருளிச் செய்வாராயினர். திருமூலர் அருளிய இத்திருமந்திரம் பதிபசுபாசம் என்னும் முப்பொருளுண்மை யினையும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால் வகை நன்னெறிகளையும் அறிவுறுத்தும் நிலையில் அமைந் துளது. இவ்வுண்மை,