பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் క్ష్మీ

எனவரும் செய்யுளாகும். " நெல்லின் கண் உமியும் செம் பின் கண் களிம்பும் எக்காலத்து உளவாயின என்று ஆராய்ந்து சொல்லுங்கால், அந்நெல்லும் செம்பும் உளவr யின அன்றே அவையுள்ளன. அன்றி இடையே வந்தன அல்ல எனல் வேண்டும். அதுபோல மாயை ஆணவமலம் கன்மம் என்னும் மும்மலங்களும் அநாதியே புள்ளனவாம். முன்னேயுளதாகிய தாமரைப்பூ மலர்தலும் குவிதலும் கதிரவனுற் செய்யப்படுமாறு போல அவை தத்தம் காசியங் களைச் செய்தல் இறைவனுலே யாகும்" என்பது இதன் பொருளாகும். மாயை இறைவனுக்குப் பரிக்கிரக சத்தி யாதலின் வல்லி என்ருர். மலம் - ஆணவம், கன்மம் - வினை.

" மூலமலத்தின் காரியம் மோகம் மதம் முதலாயின. இருவினை யின் காரியம் இன்ப துன்ப முதலாயின. மாயை யின் காரியம் தனு கரணம் முதலாயின. வள்ளலால் ஆம் எனவே திரோதான சத்தியது உண்மையும் பெற்ரும். அது, பாகம் வருவித்தற் பொருட்டு மலத்தின் வழிநின்று மோகம் முதலியவற்றைத் தொழிற்படுத்துவதாகிய சிவசங்கற் பத்திற்கு ஏதுவாதல் பற்றி, மலம் என்று உபசரித்துக் கூறப்படும். இவ்வாறு மல, கன்ம மாயை, திரோதானம், மாயா காரியம் என்னும் ஐவகைப் பாசமும் கண்டுகொள்க’

என விளக்குவர் சிவஞான முனிவர்.

ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் நெல்லில் அமைந்த முளை, தவிடு, உமி என்பவற்றைப் போன்று உயிரை முறையே பிணித்து மறைத்துள்ளன என்பது,

மும்மலநெல்லினுக்கு முளையொடு தவிடுமிபோல் மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்துநின்று ”

'சிவஞான சித்தியார்.176) எனவரும் அருணந்தி சிவா சாரியார் வாக்காலும்,

' உயிருண்ட வே யுளதுமலம் மல முளதா யொழிந்தவெல்லாம்

நெல்லின் முளே தவிடுமியோல் அநாதியாக நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்துமாறே "

(சிவப்பிரகாசம்-23) எனவரும் உமாபதி சிவாசாரியார் வாய்மொழியாலும் உணரப்படும். நெல்லின் முளைதவிடுமிபோல் ' என்னும் இவ்வுவமையில் நெல்லினுள்ளேயுள்ள அரிசி ஆன்மா