பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண். நூல்களும் 韃蠶

அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே

அறிவுதனை அருளிளுன் அறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்

கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில்

பிறியாத சிவன் தானே பிறிந்து தோன் றிப்

பிரபஞ்ச பேதமெலாந் தானுய்த் தோன்றி நெறியாலே இவையெல்லாம் அல்லவாகி

நின்றென் றுந் தோன்றிடுவன் நிராதா ளுயே, (282) என்னும் சிவஞானசித்தியர்ராகும். இச்செய்யுள்,

அறிவறியாமை யிரண்டு மகற்றிச் செறிவறிவாயெங்கும் நின்ற சிவனைப் பிறவறியாத பிரானென்று பேணுங் குறியறியாதவர் கொள்ளறி யாரே. (2580)

எனவரும் திருமந்திரப்பாடலை அடியொற்றியமைந்து இருத்தல் அறியத்தக்கதாகும்.

புண்ணிய பாவம் என்னும் இருவினைத் தளைகளையும் ஞானபூசையின் பயனகத் தெளிதலுனர்வெனப்படும் ஞான அரத்தால் அறுத்து ஞான நிட்டையில் நின்ருேர், கரணங் களின் வயத்தராதலின்றி, இறைவனது வியாபகத்தைத் தலைப்பட்டு ஒருவாற்ருனும் குறைவின்றி இம்மையே சீவன் முத்தராகி, இவ்வுடம்பு நீங்கப்பெறும் பரமுத்தி நிலையில் தமது வியாபகம் எங்கனும் ஆகி அறிவு விளங்கப்பெற்று முதல்வைேடு ஒன்றி ஒத்து நிற்பர் என உணர்த்துவது,

புண் ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்

புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி ளுலே தண்ணிய ஞானத்தில்ை இரண்டினையும் அறுத்து

ஞாலமொடு கீழ்மேலும் நண் ணு ணுகி எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன் ருள்

எங்கெழிலென் ஞாயிறெமக் கென்று குறை வின்றிக் கண்ணுதல் தன் நிறைவதனிற் கலந்து காயம்

கழிந்தக்கால் எங்குமாய்க் கருதான் போல் நிற்பன். (283) எனவரும் சிவஞானசித்தியாராகும். இது, முப்பது மாறும் படிமுத்தி பேணியாய் ஒப்பிலாப் பேரண் டத் துள்ளொளி புக்குச் செப்பவரிய சிவங்கண்டு நின்றவர் அப்பரி சாகி யமர்ந்துநின் ருரே. (126)

என்னும் திருமந்திரத்திற்கு அமைந்த விரிவுரையாகத் திகழ்தல் இங்கு ஒப்புநோக்கி யுனாதற குரியதாகும்,