பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் உண்மை விளக்கமாகும். இது,

சிவனரு ளாய சிவன்றிரு நாமஞ் சிவனரு ளான்மாத் திரோத மலமாயை. சிவன்முதலாகச் சிறந்து நிரோதம் ே பவம தகன்று பரசிவ ளுமே (2711)

என்னும் திருமந்திரத்தைத் தழுவி யமைந்திருத்தல்

கூர்ந்துணர்தற்குரியதாகும்.

வாக்கு மனமிறந்த வான்கருனை யாளன் உருத் தாக்கறவே நிற்குத் தனிமுதல்வா - நீக்காப் பதியினைப்போல் நித்தம் பசுபாச மென் ருய் கதியிடத்து மூன்றினையுங் காட்டு. 'உண்மை விளக்கம்-49)

எனத் திருவதிகை மனவாசகங்கடந்தார் தம் ஆசிரியரை நோக்கிக் கூறுவதாக அமைந்த இச்செய்யுளில், ‘பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்ருய் எனவரும் மூன்ருமடி,

" பதியினைப்போல் பசுபாசம் அளுதி " (115)

எனவரும் திருமந்திரத் தொடரை ஆசிரியர் தமக்கு

அறிவுறுத்திய மேற்கோளாகக் கொண்டுகூறும் முறையில்

அமைந்திருத்தல் காணலாம்,

அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் சென்றிடு ஞானச் சிவப்பிரகாசத்தால் ஒன்று மிருசுட ராமரு ளுே தயந் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. (2001)

எனவரும் திருமந்திரப் பொருளை உளங்கொண்ட உமாபதி சிவாசாரியார், கருத்திலுறை திருவருளும் இறைவனுலுங் கலந்து தாம் இயற்றிய சார்புநூலுக்குச் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டுள்ளார்.

சிவனுடைய அருளிடமாக நின்று ஆன்மசுத்தி பண்ணினவர்கள் தத்துவம் முப்பத்தாருேடும் கூடிநிற்கும் பொழுதே அவற்ருேடும் கூடிச் சீவிப்பதும் செய்யாமல் அறிவு குலைவதும் செய்யாமல் சிவத்துடன் கூடி நிற்கும் நிலையே சாக்கிரத்தில் அதீதம் என்னும் முறைமையை அறிவிப்பது,

1. மலமாகும் ' என்பதே திருந்திய பாடம், 2. நிரோதம் ' என்பது, நீரோ தப் என்பதன் சிதைவாகும்,