பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் శ్రేరీ

பொற்புறு கருவியாவும் புணராமே, அறிவிலாமற் சொற்பெறும் அதீதம் வந்துதோன்ருமே, தோன்றிநின்ற சிற்பர மதல்ை உள்ளச் செயலறுத்திட உதிக்கும் தற்பரமாகி நிற்றல் சாக்கிரா தீ தந்தானே. (80%

எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளாகும். இதன்கண் குறித்தவாறு தத்துவம் முப்பத்தாறும் நீங்கியே முத்தி

யென்பதற்கு,

முப்பது மாறும் படிமுத்தி யேணியாய் ஒப்பிலாப் பேரண்டத் துள்ளில் வெளிபுக்குச் செப்பவரிய சிவங்கண்டு தான் தெளிந் தப்பரி சாகி யமர்ந்திருந்தாரே. (126)

என்னும் திருமந்திரத்தையும், ஆணவமலத்தால் மறைப் புண்டு அறியாமையாய்க் கிடப்பது ஞ் செய்யாமல் உட் கரணம் புறக்கரணங்களோடுங்கூடிச் சகலளுய்ச் சத்தாதி விடயங்களோடு ங்கூடிச் சீவிப்பதுஞ் செய்யாமல் நின்ற இடமே சாக்கிராதீதம் என்பதற்கு,

நினைப்பு மறப்பு மிலாத விடத்தே வினைப்பற் றறுக்கும் விமலனிருப்பன் வினேப்பற் றறுக்கும். விமலனே நாடி நினைக்கப் புகிலவன் நீளியகு:ே. 2970; இரவும் பகலு மிலா த விடத்தே குரவஞ் செய்கின்ற குழலியை நாடி அரவஞ் செய்யாதவ ளோடுஞ் சந்திக்கிற் பரவஞ் செயா வகைப் பாலனுமாமே. (1134) நின்றவச் சாக்கிரந் துரியம தானுல் மன்றனு மங்கே மணஞ்செயா நின்றிடு மன்றன் மணஞ்செயின் மாயையு மாய்த்திடுக்

அன்றே யிவனும் அவனென லாமே. (2277, என்னும் திருமந்திரப் பாடல்களையும், நிஷடாபர ராகைக்குப் பக்குவரானவர்கள் ஆசாரியனிடத்திலே

உண்மையைப் பெற்று அநுபவத்தில் அறிகிறதொழிய நூல்களினலே அறியப்படாதென்பதற்கு,

காட்டுங் குறியுங் கடந்தவர் காரணம் எட்டின் புறத்தி லெழுதிவைத் தென் பயன் கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது ஆட்டின் கழுத்தின் அதர் கறந் தற்றே. (2937; என்னும் திருமந்திரத்தையும் மதுரைச் சிவப்பிரகாசர் பிரமாணமாகக் காட்டியுள்ளார்.