பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

பன்னிரு திருமுறை வரலாறு


தத்துவங்களும் ஆன்மாவும் தம்மிற்கூடிச் சீவிக்கும் முறைமையும், அவ்வாறு சிவிக்கும் பொழுதே அவை இரண்டும் பகல்விளக்குப்போலத் தற்போதம் சீவியாமல் நிற்க அருள் மேலிட்ட நிலையில் ஆன்மா அவ்வருளோடுங் கூடிச் சிவாநுபவத்தைப் பெறு ம் முறைமையும் அறிவுறுத்துவது,

பற்றிடுங் கருவியாவும் படர்ந்துணர் வளிக்குங்காலை உற்றறிந் திடுவதொன்றின் உணர்வினின் உண்மையாகும் மற்றது. பகல்விளக்கின் மாய்ந்திட வருவதுண்டேல் பெற்றிடும் அதனை மாயப்பிறப்பினை யறுக்கலாமே, (82) எனவரும் சிவப்பிரகாசமாகும். இதன்கண் பகல் விளக்குப் போல என்றது, தற்போதங் கெட்டு நிற்றலே. இதற்கு

ஒத்திட்டிருக்க வுடம்போ டுயிர்தான் செத்திட்டிருப்பர் சில சிவயோகிகள் {121) எனவரும் திருமந்திரத் தொடரைப் பிரமாணமாகக் காட்டுவர் மதுரைச் சிவப்பிரகாசர்.

இறைவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தினைச்

சிவமுதலாக உச்சரித்து நிட்டையைப் பொருந்தினுல் பிறப்பிறப்புக்களாகிய துன்பம் நீங்கும். இதுவே திருவைந்தெழுத்தினை ஒதும் முறை என அறிவுறுத்துவது,

சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும்

பவம், இது நீ ஒதும் படி. (திருவருட்பயன்-87) என்னும் செய்யுளாகும். இது,

நமவென்னு நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவவென்னு நாமத்தைச் சிந்தையுளேற்றப்

பவமது தீரும், பரிசும தற்ருல்

அவமது தீரும் அறும்பிறப் பன்ருே. (2717)

எனவரும் திருமந்திரப்பொருளை உட்கொண்டு கூறியது ஆகும்.

வகாரமாகிய அருள், சிகாரமாகிய சிவத்தை ஆன்மாவுக்குக் கொடுத்துப் பேரின்பத்தை விளக்கும் குற்றமற்ற அந்த ஆன்மா சிவத்துக்குத் திருமேனியாகும். என்றும், ஆன்மா மலத்துக்குந் திரோதானத்துக்கும் நடுவே பொருந்தாமல் குருவருளினுல் அருளுக்கும் சிவத்துக்கும் நடுவே நிற்கிறது முறைமையென்றும்,