பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் 507

வாசி யருளியவ்வை வாழ்விக்கும் மற்றதுவே ஆசில் உருவமுமாம் அங்கு. (திருவருட்பயன்-88: ஆசில் நவா நாப்பண் அடையா தருளினால் வாசியிடை நிற்கை வழக்கு, (ഒകൂ.-89) எனவரும் செய்யுட்களில் உமாபதி சிவாசாரியார் நுண்ணிய திருவைந்தெழுத்தின் இயல்பினைத் தெளிவாக விளக்கி யுள்ளார். இவ்விளக்கம்

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாய மறவே யடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவர் யங் கெ.நிற்க ஆனந்த மாமே. (2718)

என்னுந் திருமந்திரப் பொருளை உளங்கொண்டு கூறிய தாதல் உணர்ந்து போற்றத்தக்கதாகும்

இதுகாறும் எடுத்துக்காட்டிய ஒப்புமைப் பகுதிகளைக் கூர்ந்து நோக்குங்கால், சிவஞானபோதம் சிவஞான சித்தியார் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களாகிய மெய்கண்ட நூல்கள் எல்லாவற்றிற்கும் சைவத் திருமுறை பன்னிரண்டனுள் பத்தாந் திருமுறையாக விளங்கும் இத் திருமந்திரமே முதல் நூலாகத் திகழும் சிறப்புடையது என்பது நன்கு புலனுதல் காணலாம்.