பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெராங் திருமுறை

திருவால வாயுடையார் திருவாய் மலர்ந்தருளிய திரு முகப் பாசுரம் முதலாக நம்பியாண்டார் நம்பிகள் LIFಣ್ಣು திருநாவுக்கரசுதேவர் திருவேகாதச மாலையீருக உள்ள நாற்பது பிரபந்தங்களின் தொகுதியே பதினுெராந் திருமுறையென வழங்கப்பெறுகின்றது. இத்திருமுறையிற் சேர்க்கப்பெற்ற பிரபந்தங்களைப் பாடிய அருளாசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனுர், சோமான் பெருமாள் நாயனுர், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம்பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி எனப் பன்னிருவராவர். இவர்களுள் திருவாலவாயுடையாரென்பவர், சிவநெறிச் செல்வர்களாகிய திருவருட் பெரியோர்களால் வழிபடப் பெறும் முழுமுதற்பொருளாய், மதுரைத் திருவாலவாய்த் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவு ளாவர். ஏனைய ஆசிரியர்கள் அனைவரும் அப்பெருமானது திருவருள் பெற்ற மெய்யடியார்களாவர். எனவே வினை யின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவளுகிய சிவபெருமா லுைம் அம்முழுமுதற் பொருளது திருவருளை நிரம்பப் பெற்ற மெய்யடியார் பதினுெருவராலும் அருளிச் செய்யப் பெற்ற செழும்பாடல்களைத் தன்னகத்துக் கொண்டு திகழ் வது இப்பதினுெசாந் திருமுறையென்பது பெறப்படும்.

செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தலைநகராகிய கூடலம் பதியிலே சங்கப்புலவர்களுடன் தானும் ஒரு புலவனுக வீற்றிருந்து தமிழாராய்ந்து கொங்கு தேர் வாழ்க்கை யென்ற செழும்பாடலையும் அன்பினைந்திணையின் இயல்பினை விளக்கும் அறுபது சூத்திரங்களால் இயன்ற கள வியலென் னும் அகப்பொருளிலக்கண நூலையும் இயற்றியருளிய திரு வாலவாயுடைய சிவபெருமானே, தன்னை இன்னிசைத் தமிழாற் பரவிப் போற்றிய பாணபத்திரர் பொருட்டுப் பாடித்தந்த திருப்பாட்டு, மதிமலிபுரிசையெனத் தொடங் கும் திருமுகப் பாசுரமாகும். இறைவனது திருவருள் மொழியாகிய இத்திருமுகப் பாசுரத்தை முதற்கண் பெற்று