பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாலவாயுடையார் 53.3

பாடிய நம்பியாண்டார் நம்பியேயாவரென்பது முன்ஞேர் கருத்தாகும். திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்ப வற்றை ஒன்பதாந்திருமுறையென எண்ணிய பின்னரே திருமந்திரம் பத்தாந்திருமுறையென்ற பெயரையும் திரு முகப்பாசுரம் முதலிய இப்பிரபந்தங்கள் பதினுெராந் திருமுறையென்ற பெயரையும் எய்தியிருத்தல் வேண்டு மென்பது இவை தோன்றிய காலத்தை ஆராய் வார்க்கு நன்கு புலளும். ஆகவே நம்பியாண்டார் நம்பியால் இத் திருமுறை தொகுக்கப்பெற்றதென்பதைவிட அவர்க்கு நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றிய பெரியோர்களாற் பதினெராந்திருமுறையென்ற பெயருடன் தொகுக்கப் பெற்றிருத்தல் வேண்டுமெனக் கருதுதல் பொருத்த முடையதாகும். இனி இத்திருமுறையாசிரியர்களின் வர லாறுகளையும் அவர்கள் பாடிய பிரபந்தங்களின் பொரு ளமைதியையும் ஆராய்தல் முறையாகும்.

1. திருவாலவாயுடையார்

திருவாலவா யென்பது செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிற் சிவபெருமானுக்கமைந்த திருக் கோயிலாகும். எல்லாம் வல்ல இறைவன் அத்திருக் கோயிலில் என்றும் விளக்கமுற வீற்றிருந்து அடியார் களுக்கு அருள் சுரத்தல் பற்றி அப்பெருமானுக்குத் திரு வாலவாயுடையாரென்பது பெயராயிற்று. மதுரைத் திரு வாலவாயின் கண் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அருளிச் செய்ததாகப் பதினுெராந் திருமுறையின் முதற்கண் அமைந்த செய்யுள் திருமுகப்பாசுரம் என்பது முன்னர்க் கூறப்பெற்றது, அறிவாற்றல்களிற் சிறந்த பெரியோர்கள் எழுதியனுப்பும் ஒலையைத் திருமுகம் என வழங்குதல் நம் நாட்டிற் பண்டுதொண்டு வழங்கிவரும் வழக்கமாகும். தனக்குவமையில்லாத தனிமுதல்வகிைய சிவ பெருமான் தன் பால் அன்புடைய தமிழ் வேந்தராகிய சேரமான் பெரு மாளுக்கு எழுதிய திருமுகமாக இசை நலம் பொருந்த இச் செய்யுள் அமைந்தமையால் இது திருமுகப் பாசுரம் என வழங்கப் பெற்றது. சில ஏடுகளில் இது திருமுகப்பாயிரம் என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. இங்ங்னம் ஒருவர் க்கு ஓகூயிற் செய்தியை வரைந்து தெரிவிக்கும் நிலையில்