பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாலவாயுடையார் 等量密

பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன், தன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே,

எனவரும் அழகிய திருப்பாடலையெழுதிய திருமுகத்தைக் கொடுத்தருளினர்.

இவ்வாறு திருவாலவாயிறைவர் தந்த திருமுகத்தைப் பெற்றுத் தலைமேற் கொண்டு போற்றிய பாணபத்திரர், அப்பொழுதுதே மலைநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று சேரர் தலைநகராகிய கொடுங்கோளுரையடைந்தார். சேர மான் பெருமாள் அரசு வீற்றிருக்குந் திருமாளிகையின் முன் சென்று தமது வருகையை வாயில்காவலர் மூலம் வேந்தர் பெருமானுக்கு அறிவித்தார். பரமனையே பாடு வாராகிய பாணபத்திரரது வருகையை அறிந்த சேரமான் பெருமாள் விரைந்து வந்து அவரை வணங்கினர். அடி யேனையும் பொருளாக மதித்துத் திருமுகங்கொண்டு தாங்கள் இங்கு எழுந்தருளியது யான் செய்த தவப் பேரும் எனக் கூறி அன்போடு வரவேற்று இருக்கை நல்கி உபசரித்தார். பாண பத்திரர் தாம் .ெ க | ண ர் ந் த திரு முகத்தை வேந்தர்பெருமான் கையிற் கொடுத்தார். பாணர் தந்த திரு முகத்தை ஆர்வமுற வாங்கி முடிமேற் கொண்ட சேரர் பெருமான், ஆனந்தக் கூத்தாடி மொழி குழறக் கண்ணிர் சொரியப் பலமுறை நிலமுறப் பணிந்தார். தமக்கு இறைவர் தந்த திருமுகப் பாசுரத்தைப் பல முறை படித்து உளமுருகினர். அப்பாசு த்தைப் படியெடுத்துக் கொள்ளும்படி உரிய வகையால் எடுத்துரைத்து இறை வனது திருவருளை நினைந்து மகிழ்ந்து உரிமைச் சுற்றத் தாரையும் அமைச்சரையும் அழைத்துத் தமது நிதியறையி லுள்ள பலவகைப் பொருள்களையும் பொதி செய்து கொண ரும்படி கட்டளையிட்டார், அங்ங்னமே அவர்களும் நிதி யறையுட் புகுந்து எண்ணிறந்த பெரும் பொருளைப் பொதி செய்து கொணர்ந்தனர். அங்குக் கொண்டுவரப்பட்ட பொருளின் பரப்பையெல்லாம் சேரமான் பெருமாள் பாண பத்திரர்க்குக் காட்டினர். இப்பெரும் பொருளையும் யானை குதிரை முதலிய சேனைகளையும் இச்சேரநாட்டு ஆட்சி யுரிமையையும் தாங்களே ஏற்றருள வேண்டும் ' என வேண்டி நின்ருர், சோமான் பெருமாளது அளவிலாப்

33