பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

பன்னிரு திருமுறை வரலாறு


தந்து வேறுபடுதிருவின் வீறுபெறக்கான அவ்விருவரையும் தன்னுரரிலேயே இருக்கச் செய்தான்.

புனிதவதியாருடைய கணவனுகிய பரமதத்தன், தன் மாமன் தந்த பெரும்பொருளே வாணிகத்தின் முதலாகக் கொண்டு அதனைப் பன்மடங்காகப் பெருக்கி வாணிகத் துறையில் மேம்படுவானுயினன். அவன் மனைவியார் புனிதவதியார், எவ்வுயிர்க்குந் தாயுந் தந்தையுமாகிய இறைவன் திருவடிகளிலே வைத்த அன்பு மேன்மேற் பெருகி முதிரச் சிவனடியார்களுக்குத் திருவமுதளித்தும் வேண்டும் பொருள் கொடுத்தும் இல்லறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை யுடையராய்த் தமக்கும் தம் உயிர்த்துணை வகிைய கணவனுக்கும் புகழ் பெருக மனை யறம் நிகழ்த்துவாராயினர்.

இங்ங்னம் நிகழு நாட்களில் ஒரு நாள் பரம தத்தனைக் காண வந்தவர்களிற் சிலர் அவனுக்கு இரண்டு மாங்கனி களைக் கொடுத்தார்கள். அக்கணிகளைப்பெற்று அவர்கள் வேண்டும் காரியத்தை முடித்தனுப்பிய பரமதத்தன் மாங்கனிகள் இரண்டையும் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அப்பழங்களை வாங்கி வைத்த னர். அந்நிலையிற் சிவனடியாரொருவர் பசியால் வருந்தி இளைப்புற்றவராய் அவ்வீட்டிற்குச் சென் ருர். அடியவரு டைய தளர்வைக் கண்ட புனிதவதியார், அவர்க்கு உண வளிக்க எண்ணிஞர். அந்நேரத்திலே திருவமுதுமட்டும் சமைக்கப்பெற்றிருந்தது. கறியமுது பாகம் பண்ணப் பெறவில்லை. இந்நிலையிற் சிவனடியவரே பெறுதற்கரிய விருந்தினராய் வந்த பொழுது இதனினும் பெறத்தக்க பேறு பிறிதொன்றில்லையெனத் தெளிந்த பேரறிவினராகிய புனிதவதியார், தம்கணவன் அனுப்பிய மாங்கனிகள் இரண்டினுள் ஒன்றைக் கொண்டு வந்து திருவமுதுடன் படைத்து அடியவரை உண்ணச் செய்தார். பசி தீர்ந்த அடியவர் புனிதவதியாரது விருந்து புறந்தரும் பேரன்பின் திறத்தை யுணர்ந்து உளமகிழ்ந்து போயினர்.

பரமதத்தன் நண்பகலில் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் நீராடி உணவுண்ண அமர்ந்தான். புனிதவதியார் தம் கணவனுக்குத் திருவமுது கறியமுது முதலியவற்றைப் படைத்து அவன் அனுப்பிய மாங்கனிகள் இரண்டில் அடி