பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.இரக்காலம் மையார் 523

இங்ங்னமாகப் புனிதவதியாருடைய சுற்றத்தார்கள் வாணிகத்தின் பொருட்டுக் கடல்கடந்து சென்ற பரம தத்தன் பாண்டி நாட்டிலேயுள்ள பட்டின மொன்றில் வாழ் கின்ருனெனக் கேள்வியுற்றுச் சிலரையனுப்பி அவனுடைய நிலையையுணர்ந்து வருத்த முற்ருர்கள். புனிதவதியாரை அவன் பாற் கொண் டுபோய்விட வேண்டும் என நினைத்து அவரைச் சிவிகையிலேற்றிக் கொண்டு அவனிருக்கின்ற நகரத்தை அணுகினர்கள். அவர்களது வருகையையறிந்த பரமதத் தன் அச்சமுடையவனுகித் தன்னுடைய இரண்டாம் மனைவியே டும் மகளோடும் புனிதவதியாரையடைந்து அடியேன் உம்முடைய அருளால் வாழ்கின்றேன். இவ் விளங் குழந்தைக்கும் உம்முடைய பெயரையே இட்டேன் என்று சொல்லி அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினன் . அதுகண்ட புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்பால் அச்சமோடு ஒதுங்கி நின்ருர். அந்நிலை யிற் சுற்றத்தார்கள் நாண முற்றுப் பரம இத்தனை நோக்கி * நீ உன் மனைவியை வணங்குவது எது கருதி' என வின விஞர்கள். அதுகேட்ட பரமதத்தன் இவர் நம் போன்ற மக்கட் பிறப்பினரல்லர் கருதியது அளிக்க வல்ல தெய்வ மாந்தன்மை இவர் பாலுண்மையை யான் அறிந்து அஞ்சி விலகியபின்பு என்னுற் பெறப்பட்ட இப் பெண்மகவுக்கு இவர்தம் அருமைத் திருப்பெயரை யிட்டுப் போற்றியுள் ளேன். ஆதலால் நீங்களும் இவருடைய திருவடிகளைப் போற்றி வழிபடுங்கள் என் ருன்.

சுற்றத்தார்கள் இஃது என்ன வியப்பு எனத் திகைத்து நின்ருர்கள். கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்ட புனிதவதியார், சிவபெருமானுடைய திருவடிகளை ஒன்றிய சிந்தையினுற் போற்றி இறைவ, என் கணவனுகிய இவன் கரு திய கொள்கை இதுவாகும். இனி இங்கு இவன் பொருட்டுச் சுமந்துள்ள அழகு மிக்க தசைப் பொதியைக் கழித்து நீக்கிச் சொல்லும் மனமுங் கடந்து அப்பாற்பட்டுத் திகழுந் துயோளுகிய நின் திருவடிகளைச் சூழ்ந்து போற்ற வல்ல நின் கணங்களுளொன் ருகிய பேய் வடிவினை அடி யேனுக்குத் தந்தருளல் வேண்டும் ' எனப் பரமர்தாள் பரவி நின் ருச். அந்நிலையில் அம்பலத்து ஆடல்புரியும் அண்ண லார் திருவருளால் வீட்டு நெறியை யளித்தற்குரிய மெய் யுணர்வாகிய சிவஞானம் மிகுதலால் வேண்டிய வேண்டி