பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

பன்னிரு திருமுறை வரலாறு


யாங்கெய்தும் தவச்செல்வியாராகிய புனிதவதியார் தம் உடம்பின் ஊன் பொதிந்த தசைப் பொதியினை உதறிவிட்டு எற்புடம்பே கொண்டு வானுலகத்தவரும் மண்ணுலகத்த வரும் வணங்கிப் போற்றும் பேய்வடிவம் பெற்று விளங் கிஞர். அவ்வடிவத்தைக் கண்டு அஞ்சிய சுற்றத்தார்கள் அவரை வணங்கி அகன்று போனர்கள்.

பின்னர்ப் புனிதவதியார், இறைவன் திருவருளால் தம்முள்ளத்துத் தோன்றி யெழுந்த சிவஞானத்தின் ஒருமைப்பாட்டினுல் அற்புதத் திருவந்தாதி யென்ற பிரபந் தத்தை அருளிச் செய்தார். அதன் கண் இறைவனுடைய அழகு நிரம்பிய செந்தாமரை மலர் போன்ற திருவடிகளே ப் போற்றிப் பரவும் நல்ல சிவகணங்களுள் தானும் ஒன்ரு னேன் என்ற கருத்தமைய,

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கி துறினும் உருதொழியு மேனும் - சிறிதுணர்த்தி மற்ருெருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்தி லொன்ருய நாம், என்ற திருப்பாடலையும் அருளிச் செய்தனர். பின்பு திரு விரட்டை மணிமாலை யென்னும் பிரபந்தத்தைப் பாடிப் போற்றிச் சிவபெருமான் வீற்றிருந்து அருள் புரியுஞ் சிறப் பமைந்த திருக்கயிலையை யடைதற்கு இறைவனது திரு வருள் துணை நின்றமையால் அத்திருமலையை வழிபடுதற்கு வடக்கு நோக்கிப் புறப்பட்டார். புனிதவதியாரது பேய் வடிவத்தைக் கண்ட மக்கள், அவர் பேய் வடிவங்கொண்ட கருத்தை உள்ளபடி சொல்லக் கேட்டு வியப்பும் அச்சமுங் கொண்டு அகன்று ஒடிஞர்கள். அதுகண்ட புனிதவதியார் அண்டங்களெல்லாவற்றுக்குந் தலைவராகிய சிவபெருமான் என்னை அறிந்து அருள்புரிவராயின் உண்மையுணராத இவ்வுலகத்தவர் கண்முன் யான் எவ்வுருவாய்த் தோன்றின லென்னை எனக் கூறி வடதிசைத் தேசமெல்லாம் மனத் தினுங் கடிது சென்ருர் இறைவன் எழுந்தருளிய திருக் கயிலையின் மருங்கு சென்ற அவர், தூய்மையுடைய அத்திரு மலையைத் தம் கால்களால் மிதித்தேறுதல் கூடாெ தனக் கருதித் தலையினல் நடந்தார். இங்ங்னம் தலையினுல் நடந்து திருக்கயிலை மலையின்மேல் ஏறும்பொழுது இறை வனது திருவருள் நோக்கம் அவர்மேற் பொருந்தியது. மேலான சுகசொரூபமாகிய சிவயோகத்தைத் தன்னடியார்