பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்காலம்மையார் #43

முதல்வனது திருவுருவத்தைக் கண்டு வழிபடுந்திறமும் இனிது புலளுதல் காணலாம்.

இனி, பூதத்தாரும் காரைக்காற்பேயாரும் சேர்ந்து பாடிய ஆரிடவெண்பாவாக,

கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட் கரைத்திருந்த சாந்தைத்தொட் டப்பேய் மறைக்க வறி பாது மற்றுந்தன் கையைக் குறைக்குமாங் கூர்ங்கத்தி கொண்டு

என்ற பாடலை யாப்பருங்கலவிருத்தி யுரையாசிரியர் எடுத் துக்காட்டியுள்ளார். யாப்பருங்கல விருத்தியில் காரைக்காற் பேயார் என்றது காரைக்காற்பேயம்மையார் என்ற பாட பேதத்துடன் காணப்படுதலால் இவ் ஆரிட வெண்பாவைப் பாடிய காரைக்காற்பேயாரென்பவர் காரைக்காலம்மை யாரேயாவரெனக் கொள்ளுதற்கு இடமுளது. இவருடன் இவ்வெண்பாவைப் பாடிய பூதத்தார் என்பவர் முதலாழ் வார் மூவருளொருவராகிய பூ த த் த ழ் வ .ெ ர ன த் திரு. மு. இராகவையங்காரவர்கள் கருதுவர். மாமல்லன. கிய நரசிம்மபல்லவன் தன் பெயரால் அமைத்த மாமல்ல புரத்தை மாமல்லே கோவல் மதிற் குடந்தை எ ன் ற பாடலிற் பூதத்தாழ்வார் குறிப்பிட்டுப் போற்றுதலால் அவர் வாழ்ந்த காலம் மாமல்லணுகிய நரசிம்மபல்லவனது ஆட்சிக்காலமாகிய கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முந்திய தன்றென்பது நன்கு துணியப்படும். கி. பி. ஆரும் நூற்ருண்டின் இறுதியிலும் ஏழாம் நூற்ருண்டின் இடையிலும் வாழ்ந்த தேவார ஆசிரியர்களாகிய திருநாவுக்கரசர்க்கும் திருஞானசம்பந்தர்க்கும் சில நூற். ருண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்தவர் காரைக்காலம்மையாரென்பது முன்னர் விளக்கப்பட்டது, ஆகவே வேறுவேறு காலத்தவராகிய காரைக்காலம்மை யாரும் பூதத்தாழ்வாரும் மேற்காட்டிய ஆரிடவெண்பா வைப் பாடினர்களெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. யாப்பருங்கல விருத்தியிற் குறிக்கப்பட்ட பூதத்தார் பூதத்தாழ்வாரின் வேறெனவே கொள்ளுதல் வேண்டும். அல்லது இவ் ஆரிட வெண்பா இவ்விருபெரு மக்கள் பாடியதாகப் பிற்காலத்துப் புலவரொருவராற் பாடப்