பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562

பன்னிரு திருமுறை வரலாறு


ரனை வரும் பெற்று மகிழும் வண்ணம் கூத்தப்பெருமானது சீர்த்தியை விரித்துரைக்கும் செந்தமிழ்ப் பனுவல்ாகிய பொன் வண்ணத் திருவந்த தியைப் பாடிப் போற்றி னுர், சேரர் பெருமான் பாடிய திருவந்த தியினைக் கேட்டு மகிழ்ந்த தில்லையம்பலவர் அதற்குரிய பரிசிலாகத் தூக்கிய திருவடியிலனியப் பெற்ற திருச்சில பொலியை நிகழ்த்தி யருளினர். ஆ. ற்சிலம்பினெலியினைச் செவிமடுத்து அளவிலாப் பேருவகையுற்ற சேரமான் பெருமாள் காலந் தோறும் கூத்தப்பெரும கன இறைஞ்சிப் போற்றித் தில்லைப்பதியிற் சில நாள் தங்கியிருந்தார்.

பின்பு நம்பியாரூரைக் கண்டு வணங்குவதற்கு விரும் பித் தில்லையினின்றும் புறப்பட்டுப் பல தலங்களே வணங்கி ம கி ழ் ந் து திருவாகுரையடைந்தார். சேரமான் பெரு மாளது வருகையை யுணர்ந்த நம்பியாரூரர், சிவனடியார் களுடன் அவரை எதி கொண்டழைத்தார். நம்பியாரூரைக் கண்ட சேரவேந்தர் நிலமிசை விழுந்திறைஞ்சினர், தம்மை வணங்கிய சேரமான் பெருமாளைத் தாமும் வணங்கித் தம் இரு கைகளாலும் முகந்தெடுத்துத் தழுவிக் கொண்டார் சுந்தார். இவ்விருபெரு மக்களும் ஒருவரொரு வரிற் கலந்த பெருங்கேண்மையினராய்ப் பெரு மகிழ்ச்சி யுற்ருர்கள். இங்ங்னன் இருவரும் உயிர் ஒன்றி உ. ம்பும் ஒன்ரும் என அன்பி ல்ை அளவளாவி மகிழும் தோழமைத் திறத்தைக் கண்ணுற்ற சிவனடியார்கள், நம்பியாரூசைச் சேரமான் தோழர் என்ற பெயரால் அழைத்து மகிழ்ந் தார்கள். சேரமான் தோழராகிய சுந்தரர் கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்' என முன் தாம் பாராட்டிய சேரமான் பெருமாளது கையினைப்பற்றி அழைத்துச் சென்ருர் இருவரும் திருவாரூர்த் திருக்கோயிலையடைந்து அடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைப் பணிந்து திருக்கோயிலை வலம் வந்தனர். சேரமான் பெருமாள் உடைய நம்பியாகிய சுந்தாரைத் தொடர்ந்து சென்று பூங்கோயிலமர்ந்த பெருமான நிலமிசைப் பல முறை விழுந்திறைஞ்சினர். புற்றி. க்கொண்ட பெரு மானப் போற்றிக் கண்களில் அன்புநீர் பொழியத் திருமும் மணிக்கோவையென்னுஞ் செஞ்சொல் மாலை புனைந்தேத் திர்ை. 5೯LF 4ು செந்தமிழ்ப்பனுவலைத் தம் தோழராகிய சுந்தரர் திருமுன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்.