பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் §63

ஆரூரிடங்கொண்ட இறைவரும் சேரவேந்தர் பாடிய தெய் வத் தமிழ்ப்பனுவலே விரும்பியேற்றுக் கொண்டருளினர்.

பின்பு சுந்தரர் சேரமான் பெருமாளை அழைத்துக் கொண்டு நங்கை ரவை பார் திருமாளிகைக்குச் சென் ருர், பாவையார், திருவிளக்கு நிறைகுடம் முதலிய மங்கலப் பொருள்களுடன் சேரமான் பெருமாளே வ ர .ே வ ற் று வணங்கிச் சேரர் பெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் உடன் வந்த பரிசனங்களுக்கும் தக்கவகையால் திருவமுது அமைத்து அன்புடன் உபசரித்தார். ஆண்டநம்பியும் சேரமான் பெருமாளும் உடனிருந்து திருவமுது செய்தருளி ஞர்கள். இவ்வாறு சேரமான் பெருமகளும் நம்பியாரூரரும் திருவாரூரில் தங்கியிருக்கும்பொழுது டாண்டி நாடடிலுள்ள திருவாலவாய் முதலிய திருத்தலங்களை வழிபட வேண்டு மென்ற எண்ணம் சுந்தார்க்கு உண்டாயிற்று. அவர்தம் விருப்பத்தினைச் சேரமான் பெருமாளுக்குத் தெரிவித்தார். வன்ருெண்டரைப் பிரியாத பெருங்கேண்மையாாகிய சேர மான் பெருமாள் தமக்கு மதிமலிபுரிசைத் திருமுகம் பாடி யனுப்பியருளிய திருவாலவாய்ப் பெருமானே இறைஞ்சிப் போற்ற வேண்டுமென்னும் பேரார்வத்தால் தாமும் அவரு டன் செல்லத் துணிந்தார். ஒத்த உள்ளமுடையார் இரு வரும் அடியார் புடைசூழத் திருமறைக்காடு திருக்கோடி குழகர் முதலிய தலங்களை வணங்கித் தென்றமிழ்ப் பாண்டி நாட்டின் தலை தகராகிய மதுரையை அடைந்தார்கள். அப் பொழுது நாடாள் வேந்தனுகிய பாண்டியனும், !ாண்டியன் மகளை மணந்து மதுரையில வேட்டகத்தில் தங்கியிருந்த சோழ மன்னனும் எதிச் சென்று இவ்விரு பெருமக்களையும் வரவேற்றுத் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு அழைத் துச் சென்றனர். நம்பியாரூரருடன் திருவாலவாய்ப் பெரு மானைக் கண்டு மகிழ்ந்த சேரமான் பெருமாள், அடியேனே யும் ஒரு பொருளாக எண்ணித் திருமுகம் அருளிய பேரருளின் எல்லையை அறிந்திலேன்' என உரை தடுமாறிக் கண்ணிரரும்பு ஆலவாய்க் கடவுளைப் பரவிப்போற்றினுர், பாண்டியன் இவ்விரு பெருமக்களை யும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றின்ை.

இங்ங்ணம் சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் மூவரும் நம்பியாரூசராகிய சுந்தரரும் ஒருவரோ

டொருவர் அன்பினுல் அளவளாவிப் பாண்டி நாட்டுத்