பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பன்னிரு திருமுறை வாலாறு

படியில் வைத்தருளிஞர். மறுநாள் பூசை செய்ய வந்த அந்தணர் என்றுமில்லாததோர் புத்தகம் அங்கிருத்தலைக் கண்டு அதிசயித்துத் தில்லை நகரத்தார்க்குத் தெரிவித்தார். அதனைக்கண்ட நகரமாந்தர் இஃது இறைவனருளிய ஆகமமோ தமிழ்நூலோ என அறிதல் வேண்டும் என்றனர். அப்பொழுது தில்லை வாழந்தனரொருவர் முன் சென்று அவ் ஏட்டினை நறுமலர் கொண்டு அருச்சித்து வணங்கி அவிழ்த் துப் படித்துப் பார்த்தபொழுது அதன் கண் திருவாசகமும் திருச்சிற்றம்பலக் கோவையும் எழுதப்பெற்று முடிவில் திருவாதவூரன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடை யார் எழுதியது” எனக் கைச்சாத்திட்டிருத்தல் கண்டு இறைவன் திருவருளே வியந்து போற்றினர்கள். இத்திரு முறையின் பொருளைத் திருவாதவூரடிகள் பாற் கேட்டுனர் தல் வேண்டும் என்ற பெரு விருப்பம் அங்கிருந்தோரனை வருள்ளத்திலும் மிக்குத் தோன்றியது. எல்லோரும் திருவாதவூரடிகள் இருந்த தவச்சாலையை யடைந்து வாத வூரடிகள் திருவடிகளை இறைஞ்சி நின்று திருவாசகத் திரு முறை தமக்குக் கிடைத்த அற்புத நிகழ்ச்சியை எடுத் துரைத்து அத்திருமுறைக்குப் பொருள் விரித்தருளும்படி வேண்டிக் கொண்டார்கள். சிவபெருமானது திருவருட் பெருமையை நினைந்து நெஞ்சம் நெக்குருகிய வாதவூரடிகள், தம்மை வணங்கிய அன்பர்களாகிய எல்லோரையும் அழைத் துக்கொண்டு பொன்னம்பலத்தை யடைந்தார். திருவாச கத்திற்குப் பொருளாவார் பொன்னம்பலவராகிய இவரே ! எனக்காட்டி எல்லோருங்காணத் தில்லையம்பலத்திற் புக்கு மறைந்தனர். தில்லைச் சிற்றம்பலவணுகிய இறைவன், திருவாதவூரடிகளைப் பாலுடன் மேவிய நீர்போற் பிரிவறக் கலந்து ஒன்ரும் வண்ணம் தன் திருவடியிற் சேர்த்தருளி ன்ை. அடிகளது திருமேனி சிவருபமாகிய இவ்வற்புத நிகழ்ச்சியைக் கண்டோரனைவரும் சிவபெருமானது திரு வருளை வியந்து திருவாசகத் தேனை நுகர்ந்து மகிழ்ந் தாாகள.

(4) திருவுத்தரகோசமங்கைப் புராணம்

இந்நூலில் பார்ப்பதி தவம் புரிந்த அத்தியாயத்தில் மாணிக்க வாசகரது வரலாறு சுருக்கமாகக் கூறப்பட்டுளது. திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயிலின் தென் மேற்குத் திசையில் முற்றுணர்வுடைய முனிவர் ஆயிரவர் சிவபெரு