பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயகுள் ఫ్రీవీ

குறித்த பருவத்தே வாராமையால் அவரதுமனம், பொங்கி வரும் கங்கை வெள்ளத்தின் வேகத்தைத்தணித்த நீண்ட சடையினையுடைய உமையொருபாகத்து இறைவர் கோயில் கொண்டருளிய திருவாரூரெல்லையிற் சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலியிடுதற்பொருட்டமைந்த பலிபீடக்கல் தானே.” எனத் தோழி படருழந்து வருந்துகின்ருள். கருநிறமேகம் மலேமுகடேறி நுண்துளி பொழிதலாகிய முதல் மழையைக் கண்ட அளவே தலைமகள் கார்ப்பருவத்தின் முதிர்ந்த நிலையினையொத்துக் கண் ணிர் சொரிந்து வருந்துகின்ருள் ; இப்பருவம் முதிர்ந்தால் இவள் நிலை யாதாகுமோ எனவும், இறைவன் கங்கைப்பெருவெள்ளத்தின் வேகத்தையடக்கி உமாதேவியாரை ஒருபாகத்திற்கொண்டு பிரியாது விளங்கு தல் போல இவளது கண்ணிர்ப் பெருவெள்ளத்தைத் தவிர்த்து இவளைப்பிரியாதுஉடனுறைந்து தலையளிசெய்தற் குரிய காதலர் தமது கடமையை மறந்து உரிய காலத்தில் வாராது தாழ்த்தமையால் அவரது ம ைம் அன்பு.ை யாரது துயர்கண்டு நெகிழும் மென்மையுடையதன் றெனவும், சிற்றுயிர்களைப் பலியிடுதற்கிடனுகத் திருவாரூரெல்லையில் அமைந்த பலிபீடக்கல்லோ இதுவென ஐயுறுதற்குரிய கொடுமையுடையதாயிற்றெனவும் தோழி நினைத்திரங்குங் குறிப்பு இப்பாடலில் இனிது புலனுதல் காணலாம்.

தெய்வத்தின் திருவருளால் ஒருபொழிலிடை உருவும் திருவுமிக்க தலைமகளொருத்தியைக் கண்ணுற்றுக் கூடிப் பிரிந்த தலைமகன், தன்னுயிரினுஞ் சிறந்த அவளை மீண்டும் அடைதற்கியலாத அருமைநிலையை எண்ணி வாட்டமுற, அதுகண்டு அவனது உளநிலையை வினவியறிந்த பாங்கன், 'இத்துயர்நிலை நினது தலைமைப்பாட்டிற்கு ஏலாது என அவனை இடித்து க்கூறக்கேட்ட தலைவன் எதிர்மறுத்துக் கூறுதலும், தலைமகளது உயிர்த்தோழியின் உடன்பாடு பெற்றுத் தலைவியையடையக் கருதிய தலமகன், தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த புனத்திடைச்சென்று என்னுல் துரத்தப்பட்டோடிய மதயானை இங்கு வந்ததோ என வினவுதலும், இங்கனம் இரந்து பின்னின்ற தலைவனது பேரன்பினையுணர்ந்த தோழி தலைமகளைக் குறைநயப்பித்த லும், தன் ஆயத்திடையே விருந்தினகைப் புக்க தலைவனுல் தான் அடைந்த வேறுபாட்டினைத் தலைவி தோழிக்குக் கூறுதலும், நள்ளிரவில் தலைவனது தேர் வரவினைத் தோழி