பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594

பன்னிரு திருமுறை வரலாறு


திருமறைக்காடு, திருமாந்துறை என்ற திருத்தலங்களில் அப்பெருமான் வீற்றிருந்து அருள் புரிதலும் ஆகிய செய்திகள் இப்பிரபந்தத்துள் ஆங்காங்கே குறிக்கப் பெற்றுள்ளன.

திருவாரூரெல்லையில் தெய்வங்களுக்கு உணவு படைத்தற்குரிய பலிபீடக்கல் அமைந்தமையும் (1) தேவர் கள் சிவபெருமானை வழிபடுதற்பொருட்டு நள்ளிரவில் இவ் வுலகத்திற்கு வருதலும் (9) பகைவரொடுபொருது இறந்து பட்ட வீரருடைய பெயரும் அவர்கள் போர்க்களத்திற் காட்டிய பேராற்றலுமாகியவற்றைக் கல்லிற் பொறித்து அக்கல்லைத் தெய்வமாக நட்டு வழிபடும் வழக்கமுண்மையும் (1.6) திருவாரூர்க் கடைவீதியிற் கண்ணுடியிற் பதுமையின் நிழல் படியப் பாவைக்கூத்து நிகழும் செய்தியும் (49) திருவாரூரில் திண்ணி தின் அமைந்த கரைகளையுடைய பெருங்குளம் இருந்தமையும் (22) அவ்வூரில் பெருவிழாவின் ஆரவாரமும் (25) இம் மும்மணிக்கோவையிற் குறிக்கப்

பட்டன.

கார்ப்பருவங் கண்டிரங்கிய தலைமகளது பிரிவாற்ருமை கண்டு தோழி கவல்வதாக அமைந்தது, இம் மும்மணிக் கோவையின் முதற்பாடல். "விரிந்து பரந்த பெருங்கடலை முகந்து சேறுபட்டாற்போன்று விளங்குங் கருநிற மேக மானது மலைமுகட்டிலேறி நுண்ணிய மழைத்துளிகளைப் பொழிந்தது. அது கண்ட தலைமகள் காதிலணிந்த குழைகள் மின்னலையொத்து விளங்கவும் புருவம் வானவில்லை ஒத்துத் தோன்றவும் சிவந்தவாய் இந்திரகோபப் பூச்சியின் நிறத் தினைப் புலப்படுத்தவும் கைகளாகிய காந்தள் மலரவும் பற்க ளாகிய முல்லைகள் அரும்பவும் கூந்தலும் தேமலும் கொன்றையைப் போன்று தோன்றவும் வனப்புமிக்க மேனியின் சாயல் மயிலின் தோற்றத்தினைப் புலப்படுத்திக் காட்டவும் உள்ளத்தே நிரம்பிய ஆற்ருமையால் உளதாகிய பெருமூச்சு ஊதைக்காற்றினையொத்து மேன்மேல் எழுந்து இயங்கவும் கண்ணிராகிய பெருமழையைப் பொழிந்தமை யால், அந்நீர் பெருகிக் கண்ணிற் பூசப்பெற்ற அஞ்சனச் சேற்றையலப்பி மார்பிலணியப்பெற்ற மணி பொன் வயிரம் அகில் சந்தனம் ஆகியவற்றை யலைத்துக்கொங்கைகளாகிய மலேமுகட்டிடையே இழி தரக் கார்ப்பருவத்தின் தோற்றம் உடையளாயினுள். அவளைப் பிரிந்துசென்ற காதலர் தாம்