பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் தாயஞர் §93

முதல் இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனுரேயாவர். நக்கீர தேவ நாயனுர் பாடிய திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, இளம்பெருமானடிகள் பாடிய சிவபெருமான் திருமும்மணிக்கோவை, அதிராவடிகள் பாடிய மூத்த பின்ளே யார் திருமும்மணிக்கோவை பட்டினத்தடிகள் பாடிய திருக்கழுமல மும்மணிகோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகிய இவை யாவும் சேரமான் பெருமாள் பாடிய இத் திருவாரூர் மும்மணிக் கோவையின் அமைப்பை அடியொற்றியெழுந்த செந் தமிழ்ப்பனுவல்களேயாம்.

திருவாரூர் மும்மணிக்கோவையிலுள்ள செய்யுட்கள் முப்பதும் அன்பினைந்திணையாகிய அகத்திணையைப் பொரு னாகக் கொண்டு பாடப்பெற்றனவாகும்.திருவாரூரில் திருக் கோயில் கொண்டருளிய சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனுகக்கொண்டு உலக நூற்பொருளாகிய அகத்திணை யொழுகலாற்றைப் புலப்படுத்துவது இம்மும்மணிக்கோவை யாதலின், அறிவனுாற்பொருளும் உலகநூல் வழக்கும் என இருபொருளும் நுதலி இயற்றப்:ெற்றது. இதுவெனல் பொருந்தும். உமையாருபாகத்திறைவணுகிய சிவபெருமான் வானின்றிழிந்த கங்கைப் பெருவெள்ளத்தின் வேகத்தைக் கெடுத்து அதனைத் தன் செஞ்சடைக்கண் அடக்கியருளிய தும், தேயுந்திங்களே யணிந்து உய்வித்ததும், ஒருவரும் உண்ணுத நஞ்சினையுண்டு மிடற்றிலடக்கி விண்ளுேரை வாழ்வித்ததும், மேருமலையை வில்லாக வளைத்ததும், திரிபுரத்தை பெரித்ததும், தக்கனது வேள்வியைச் சிதைத் ததும், கூற்றெனப் பெரிய கொடுந்திறலாளனது ஆற்றலை யழித்ததும், மன்மதனை எரித்ததும், யானையையுரித்துப் போர்த்ததும் அருச்சுனற்கு அருள் செய்ததும் ஆகிய செய்தி களும், அண்டத்துக்கு அப்பாலணுகிய அவ்விறைவன் அடியார்களது பிறவிநோய் நீங்க அருள்புரிதற் பொருட்டு அரிவை பாகத்து அண்ணலாய்த் திருவுருக்கொண்டு திருவாரூரிற் கோயில் கொண்டெழுந்தருளிய எளிமைத் திறமும், உலக மக்களை வஞ்சித்தலை மேற்கொண்டு பொய்யே வழிபாடு செய்தொழுகும் வஞ்சகரையும் மெய்யடி யாராகத் திருத்தி ஆட்கொள்ளும் பேரருளாளனுக விளங் கும் அவனது அருளின் நீர்மையும், திருக்கடவூர், சிராமலே,

38