பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596

பன்னிரு திருமுறை வரலாறு


தலைவிக்கு அறிவித்தலும், இரவுக்குறி ೩5೧g 5 தலைவனை நோக்கி வழியிடையுளவாந் தீங்கு நினைந்து இரங்கும் தலைமகளது ஆற்ருமை கூறி இரவு வருதலைத் தவிர்க என விலக்குமுகத்தால் தலைவியை விரைந்து மணந்துகொள்க எனத் தோழி தலைவனை வற்புறுத்தலும் ஆகிய குறிஞ்சித்திணை பற்றிய செய்திகளும், களவொழுக்க மொழுகிய தலைமகன் தலைமகளை ஒருவருமறியாதவாறு உடனழைத்துச் சென்றவழி அஃதுணர்ந்த நற்ருய் செவிலித்தாய் ஆகிய இருவரும் சுரத்து அருமையும் தலைமகளது மென்மைத் தன்மையும் நினைந்து வருந்து தலும், தலைமகளைச் தேடிச்சென்ற செவிலி சுரத்திடைக் குரவொடு புலம்புதலும் ஆகிய பாலைத்திணை பற்றிய செய்தி களும், தலைவியை மணந்து மனையறம் நிகழ்த்தும் தலைவன் பொருள் முதலியன கருதிப் பிரிந்து செல்லுங்கால் அவன் மீண்டு வருவதாகக் குறிக்கப்பட்ட கார்காலத்தின் வரவும், அப்பருவத்தே தலைவனது வருகையை எதிர்நோக்கிய தலை மகள் அவன் வாராமையெண்ணி வருந்துதலும், குறித்த வண்ணம் தலைமகனது தேர்வரக் கண்ட தலைமகள் மெலிவு அகன்று பொலிவு பெற்றமைகண்டு தோழி மகிழ்தலும் ஆகிய முல்லைத்திணைபற்றிய செய்திகளும், தலைவன் பரத் தையிற் பிரிந்தவழி வருத்தமுற்ற தலைவி அவனை இடை விடாதெண்ணிய தன்னெஞ்சொடுபுலத்தலும், அவ்வழி வாயிலாகப்புக்க பாணனை வெகுண்டுரைத்தலும், தலைவன் ஆற்ருமையே வாயிலாகத் தன்னையணைந்தவழி ஊடுதலும் ஆகிய மருதத்திணை பற்றிய செய்திகளும், தலைவனைப் பிரிந்துஆறதலாற்ருத தலமகள் கடலொடு கூறி வருந்துத லாகிய நெய்தற்றிணை பற்றிய செய்தியும் என அன்பினைந் திணையற்றிய ஒழுகலாறுகளே இத் திருவாரூர் மும்மணிக் கோவையில் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இந்நூல் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகிய சங்க இலக்கியங் களிற் சேரமான் பெருமாள் நாயஞர்க்கு உள் ள நிரம்பிய பயிற்சியையும் மக்களைப் பொருளாகக் கொண்டு பாடு தற்கு உரிய அகனந்திணைப் பாடல்களில் எல்லாம் வல்ல இறைவனப் பாட்டுடைத் தலவகை வைத்துப் போற்று முகத்தால் உலகநூல் வழக்கும் அறிவனுாற் பொருளும் ஆகிய இரு திறமும் விரவப் புலனெறிவழக்கங் கண்ட

ஆவரது திருவருட் புலமைத் திறத்தையும் இனிது விளக்குவதாகும்.