பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனர் 599

தலைவனுடன் சென்ற தலைவியைத் தேடிச் சுரத்திடைச் சென்ற செவிலி, குர வொடு வருந்திக் கூறுவதாக அமைந்தது,

பட்டோர் பெயரும் ஆற்றலு மெழுதி நட்ட கல்லும் மூதூர் நத்தமும் பரன முரம் பதரு மல்லது படுமழை வரன்முறை யறியா வல்வெயிற் கானத்துத் தேனிவர் கோதை செல்ல மானினம் அஞ்சிலோதி நோக்கிற் கழிந்து நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக கொங்கைக் கழிந்து குன்றிடை யடைந்த கொங்கிவர் கோங்கமுஞ் செலவுடன் படுக மென்ருேட் குடைந்து வெயினிலே நின்ற குன்ற வேய்களுங் கூற்றடைந் தொழிக மாயிருங் கடற்றிடை வைகலாயிரம் பாவையை வளர்ப்போய் அண் ண னிப் பாவையை விலக்காது பிழைத்தனமாதோ நலத்தகு அலைபுன லாரூர் அமர்ந்துறையமுதன் கலையமர் கையன் கண்ணுதலெந்தை தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த கொங்கலர் கண்ணி யாயின குரவே.

எனவரும் செய்யுளாகும். அலமறியும் புனல் சூழ்ந்த திருவாரூரில் எழுந்தருளிய அமுதம் போல்வானும் கலை மானை யேந்திய கையினனும் ஆகிய கண்ணுதற் பெருமானது சடைமுடியில் அணியத் தக்க நறுமலர்களைப் பூக்கும் குரவே, போர்க்களத்திற் பொருதுபட்ட வீரர்களது பெயரையும் பேராற்றலையும் பொறித்து நடப்பட்ட நடுகற் களும் பழமையுடையதாயமைந்த ஊரிற் குடியிருப்பிடங் களும் பருக்கைக் கற்கள் நிரம்பிய வன் னில வழியும் அன்றி மழை பெய்த வளமறியாத வெயிலாற் கொதிக்கும் இவ் வெஞ்சுரத்தே தேனிறைந்த மாலையை யணிந்த என் மகள் செல்லக்கண்டும் அவளது கண்ணழகிற்குத் தாம் தோற்றமை பற்றி மானினங்கள் விலக்காதுவிடுக. கொங்கைக்குத் தோற்றமையால் குன்றிடையடைந்து நோற்கும் கோங்கமும் அவளது போக்கிற்கு உடன்படுக. அவளுடைய தோளிற்குத் தோற்று வெயிலிடை நோற்று நின்ற மூங்கில்களும் வாயடைத்திருந்திடுக. பெரிய சுரத் தினிடையே நாள் தோறும் ஆயிரக்கணக்கான பாவைகளை (பாவைபோலும் நறுமலர்க் காய்களை) ஈன்று வளர்க்கும்