பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600

பன்னிரு திருமுறை வரலாறு


இயல்புடைய தாயகிய நீ, நினக்கு மிகவும் அணியளாய் வந்த என் பாவையைத் தடுத்து நிறுத்திக் காக்கத் தவறி விட்டாய். அருளான கிைய சிவபெருமானது சடைமுடிக்கு அணியாகும் சிறப்புடைய நறுமலர்களைப் பூக்கும் நினக்கு இது நன் ருமோ ' எனச் செவிலி குரவை நோக்கி வருந்தியதாக அமைந்த இப்பாடல், சங்க இலக்கியத்திற் பாலைநில இயல்புரைக்கும் செய்யுட்களை அடியொற்றிய தாய்ச் சிவபெருமானது அருளின் நீர்மையையும் புலப் படுத்தி நிற்றல் அறிந்து இன்புறத்தக்கதாகும்.

பரத்தையிற் பிரிந்த தலைவன் பொருட்டு வாயிலாக வந்த பாணுைெடு தோழி வெகுண்டு கூறுவதாக அமைந்தது,

மனையுறை குருவி வளைவாய்ச் சேவல் சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி ஈனி விழைக்க வேண்டி யானு அன்பு பொறைகூர மேன்மேல் முயங்கிக் கண்ணுடைக் கரும்பி னுண்டோடு கவரும் பெருவள ந் தpஇய பீடுசால் கிடக்கை வருபுன லூரன் பார்வையாகி மடக்கொடி மாதர்க்கு வலையாய்த்தோன்றிப் படிற்று வாய்மொழி பலடா ராட்டி உள்ளத் துள்ளது தெள்ளிதிற் கரந்து கள்ள நோக்கமொ டு கைதொழு திறைஞ்சி எம்மிலோயே பாண, அவனேல் அமரரு மறியா ஆதிமூர்த்தி குமரன் ருதை குளிர்சடை யிறைவன் அறை கழ லெந்தை யாரு ராவண த் துறையிற் றுக்கும் எழில்மென் காட்சிக் கண் னடி யனைய நீர்மைப் பண்ணுடைச் சொல்லியர் தம்ப லோனே.

என்பதாகும். பாணனே, வீட்டின் இறப்பில் வாழும் வளைந்த வாயினையுடைய குருவிச் சேவலானது தன்பெடை கருமுற்றிய செவ்வி நோக்கி, அது தங்கிக் கருவுயிர்த்தற் குரிய அறையினை யமைக்கக் கருதி நீங்காத பேரன்பினுல் தன்பேடையைப் பலகாலுந் தழுவி அரிதிற் பிரிந்து சென்று கரும்பினது நுண்ணிய பூந்தோடுகளைக் கவர்ந்துவரும் நீர்வளம் நிறைந்த ஊரினையுடைய தலைவனுக்கு அவன் விரும்பிய பரத்தையரைப் பிணித்தற்குரிய பார்வை விலங்காகவும் இளமை பொருந்திய பூங்கொடி போலும்