பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயசூர் 奶令莎

பட்டு வெள்ளடியின் இகந்துவரும். ' இரண்டுறுப்பாயும் ஒருறுப்பாயும் பாவும் பொருளும் வேறுபட்டு வெள்ளடியின் இ க ந் து ரு ங் கலிவெண்பாவாகிய உலாச்செய்யுள் அடி வரையன் றி வருமாறும் பெருந்திணைப் பொருள் மேல் வரும் மடற் செய்யுளும் ஒருறுப்பாய் அடியிகந்து வருமாறும் இக்காலத்தார் கூறுகின்றவற்றுட் காண்க. அது திரு வுலாப்புறத்துள் ளும் வாமான வீசன் வரும் என முடிந்து மேல் வேருேரு றுப்பாயவாறும், ஒழிந்த வுலாக்களுள் வஞ்சி யுரிச்சீர் புகுந்தவாறும் அடிவரையறை யின் மையுமாம்" என்பர் நச்சிர்ைக்கினியர். எனவே அவர் காலத்தில் இவ் இவ்வுலா வாமான வீசன் வரும் என 58-ஆம் கண்ணி வரை ஓருறுப்பாக முடிந்து, வசமான வீசன் மறுவில்சீர் வானவர் தங், கோமான் ப.ை முழக்கங் கேட்டலுமே என வரும் 59-ஆம் கண்ணி முதலாக வேருேருறுப்பாகியும் வழங்கியதெனவும், 8ே,59-ஆம் கண்ணிகளுக்கு நடுவே போழ்திற் - கே மேலே ' என்ற தொடர் இவ்விரண்டுறுப் புக்களையும் இணைத்தற் பொருட்டுப் பிற்றை நாளில் இயைத் துரைக்கப் பெற்றிருத்தல் வேண்டுமெனவும் கருதுதல் பொருந்தும்.

திருமாலும் நான்முகனுந் தேடிக்கான வொண்ணுத பெருமாளுகிய இறைவன், சீரார் சிவலோகத்துள் சிவபுர மென்னுந் தலைமைப் பதியிலே அழகிய திருக்கோயிலி னுள்ளே அம்மையப்பனுக வீற்றிருக்கின்ருன் இறை வனைக் காண வேண்டுமென்னும் பேரார்வமுடைய தேவர்கள் திருக்கோயிற்புற முன் றிலிலே நின்று எங்க ளுக்குக் காட்சி தந்தருள்க’ எனக் குறையிரந்து வேண்டு கின்றனர். தேவர்களது வேண்டுகோளுக்குத் திருவுள மிரங்கிய சிவபெருமான், ஒரு நாள் பட்டுடுத்துப் பொன்னும் மணியுமாகிய அணிகலன்களைப் பூண்டு மலர்மாலை யணிந்து வடிவுடைய கோலம் புனைந்து நந்திமா காளராய சிவகணத் தலைவர் கொணர்ந்த அடிநிலை மேல் திருவடி வைத்துத் திருக்கோயிலின் வாயிலை யடைந் தருளி, வசுக்கள் தோத்திரஞ் சொல்லவும் முனிவர் எழுவர் வாழ்த்துரைக்கவும், ஆதித்தர் பன்னிருவர் பல்லாண்டு பாடவும், அகத்தியர் யாழ் வாசிக்கவும், தீக் கடவுள், நறும்புகையேந்தவும், இயமன் மங்கல வாழ்த்துப் பாடவும் நிருதி முதலியோர் அணிகலன்களைத் தாங்கி