பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 புன்னிரு திருமுறை வரலாது

வரவும், வருணன் நிறைகுட நீர் தாங்கவும். காற்றுத் தெரு வினைக் கூட்டித் தூய்மை செய்யவும் மேகம் மழை நீ: தெளித்துப் புழுதியினை யடக்கவும் சந்திரன் குடைபிடி: கவும், ஈசானன் அடைப்பையேந்தவும், அசுவினி தேவர்கள் மந்திரத்தால் வாழ்த்துரைக்கவும், உருத்திரர்கள் தோத்; திரம் சொல்லவும். குபேரன் வேண்டும் பொருள்களை வழங்கி வரவும். கங்கை யமுனை முதலிய தீர்த்தங்களாகிய மங்கையர்கள் வெண்சாமரை வீசவும், திசையானைகள் தொழுதிறைஞ்சவும், மேகமே நீல விதானமாகவும்: மின்னல் கொடிகளாகவும் இடி முரசமாகவும் அமையத்; தும்புரு நாரதர் இசைபாட வானர மகளிர் நடமாடவும்: ஞானமே யுருவாகிய இடபத்தின் மேலமர்ந்து ஏழுவாயில் களையுங்கடந்து திருவுலாப் புறப்பட்டருளினுன், தேவ சேனுபதியாகிய முருகன் மசில் மீதமர்ந்து முன் செல்லத் தேவர் தலைவனுகிய இந்திரன் வெள்ளை யானை மீது பின்னே வர நான்முகன் அன்னப்பறவை மீதமர்ந்து வலப்பக்கத்தே வர, திருமால் கருடன் மீதமர்ந்து இடப்பக்கத்தே வர. மதன் கரும்பு வில் லும் மலரம்புந்தாங்கி முன்னே செல்ல மாசாத்தன் குதிரையூர்ந்து செல்ல இறைவனது திருவுலாப் புற பாடாயிற்று.

யானை முகக் கடவுளாகிய விநாயகளுேடு சத்தமாதர் களும் தன்னைச் சூழ்ந்துவ நீலமேனியுடைய கொற்றவை சிங்கத்தின் மீதமர்ந்து உடன் வருகின்ருள். விச்சாதரர் இயக்கர் கின்னர் கிம்புருடர் சாரணர் அரக்கர் அசுரர் முதலிய பதினெண் கணத்தவர்களும் சல்ல தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு கல்லவடம் மொந்தை தட்டழி சங்கம் சலஞ்சலம் தண்ணுமை பேரி குடமுழவப் கொக்கரை வீணை குழல் யாழ் தடாரி படகம் மத்தளம் துந்துபி முருடு ஆகிய இவ்வாத்திய வகைகளால் திசை தோறும் இசை முழக்கஞ் செய்கின்றனர். மங்கலம் பாடு வார் இறைவனை யடைந்து வணங்குகின்றனர். மற்போரும்: விற்போரும் செய்யவல்ல வீரர்கள் தத்தம் தொழிற்றிறயை யைக்காட்டி ஆரிவாரித்து வருகின்றனர். அறுவகைப் பெரும் பொழுதுகளும் யோகமும் தவமும் ஞானமும் மந்திர மும் மூன்று காலமும் குணங்களும் வாலகிலியராகிய முனி வர்களும் முன்வந்து குழுமி நின்று இமையோர் பெரு மானே போற்றி, உமையாள் மணவாளா போற்றி ' என