பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயகுர் 615

தாம் பாடிய பாடலை அவனுக்குக் காட்டி அவனது பாராட்டு தலைப் பெருது வறிதே திரும்பினர்.

இஃ திங்ங்ணமாக, சிவபெருமானை வழிபடும் நல் லொழுக்கமுடைய பிரமசாரியாகிய தருமி யென்னும் அந்த ணன், பெற்ருேரில்லாமையால் நெடுங் காலம் மணஞ் செய்யப்பெருது, திருமணத்தினை நிறைவேற்று தற்குரிய பொருளைத் தந்தருளும்படி திருவாலவா யிறை வன் பாற் குறையி ந்து நின் ருன். அவனது வேண்டுகோளை நிறை வேற்றக் கருதிய இறைவன், கொங்குதேர் வாழ்க்கை யெனத் தொடங்கும் செய்யுளைப் பாடிக் கொடுத்துத் தரு மியே நீ இச் செய்யுளைச் சங்கப் புலவர் பேரவையிற் படித்துக் காட்டி இதற்குரிய பொற் கிழியைப் பெற்றுக் கொள் வாயாக. இச்செய்யுளுக்கு யாரேனுங் குற்றங் கூறுவாருளராயின் யாமே அங்கு வந்து இதன் பொரு ளமைதியை விளக்கிக் கூறி நினக்கு உதவி செய்வோம் : எனக் கூறி விடை கொடுத்தனுப்பினுர். தருமி, சங்கப் புலவர்களிடஞ் சென்று அச் செய்யுளைக் காட்டின்ை. அவர்கள் தம்மனத்துள்ளே அதன் பொருள் நயங்களே. யெண் ணி வியந்தனராயினும் அதுபற்றி வெளிப்பட எதுவுஞ் சொல் லாதிருந்தனர். அதனையறிந்த தருமி அப் பாடலைப் பெற்றுச் சென்று பாண்டிய மன்னனுக்குக் காட்டி ன்ை. அச் செய்யுளேப் படித்துணர்ந்த வேந்தன் தனது உள் ளக் குறிப்பு அச்செய்யுளிற் புலப்படுத்தப் பெற்றிருத் தலை யறிந்து பெரிதும் வியந்தான். 'பாவலரே நீச் விரைந்து சென்று சங்க மண்டபத்திற் கட்டப் பெற்றுள்ள பொற் கிழியைக் கைக்கொள் வீராக எனத் தருமியை நோக்கிக் கூற அவனும் அரசனது இசைவு பெற்றுச் சங்க மண்டபத்தை யடைந்து பொற் கிழியை எடுக்கப் புகுந் தான். அது கண்ட நக்கீரர், அவனைத் தடுத்து நிறுத்தி, பாவின் சொற்பொருளறியாத நீ இதனைத் தொடுத லாகாது. நின் கவி குற்றமுடையது. இச்செய்யுளை உனக்குப் பாடிக் கொடுத்த புலவனை இங்கு அழைத்துவா எனக் கூறினுர், அது கேட்டு வருத்தமுற்ற தருமி, ஆலவாயிறைவர் திரு முன் சென்று எம் பெருமானே, நும் முடைய கவிக்குச் சிற்றறிவுடைய மாந்தர் குற்றங் கூறினரே எனக் கூறி முறையிட்டான். அந்நிலையில் ஆலவாயில் எழுந்தருளிய சிவபெருமானே செந்தமிழ்ப்