பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616

பன்னிரு திருமுறை வரலாறு


புலவளுகத் திருமேனி தாங்கிச் சங்க மண்டபத்தை

யடைந்து, என் கவிக்குக் குற்றங் கூறினுன் யாவன் ' என

வினவ, நானே குற்றங் கூறினேன் என் ருர் நக்கீரர்.

அது கேட்ட இறையனர்,

அங்கங் குலுங்க வரிவாளி எனய் தடவிப் பங்கம் படவிரண்டு கால்பரப்பிச் - சங்கைக் கிர்கி ரெனவறுக்குங் கீ னே வென் கவியை ஆராயு முள்ளத்தவன்.

என்ற செய்யுளைப் பாட, அதற்கு மறுமொழியாக,

சங்கறுப்ப தெங்கள் குலம் தம்பிராற் கேதுகுலம் பங்கமுறச் சொன்னுற் பழுதாமோ - சங்கை யரிந்துண்டு வாழ்வோம் அரனுரைப் போல இரந்துண்டு வாழ்வ திலை.

என்ற செய்யுளைப்பாடினர் நக்கீரர். அவரை நோக்கிய இறைவர் யான் பாடிய செய்யுளிலுள்ள குற்றம் யாது என வினவினர். பூசுவன பூசிப் புனைவன புனைந்து கை செய்யாது விடிற் சிக் கண்டு நாறு மியல்பினதாகிய மகளிரது கூந்தலுக்கு இயற்கை மண முன் டெனச் செப்பும் இச்செய்யுள் பொருட்குற்ற முடையது என்ருர் நக்கீரர். அம்மொழி கேட்ட இறைவர், தெய்வமாதர் கூந்தற்கும் நறுமணமில்லையோ' என வினவ, இல்லை யென் ருர் நக்கீரர். கவுசியாகிய உமா தேவியின் கூந்த லும் அப்படியோ என் ருர் இறைவர். அதுவும் அப்படியே யென்ருர் நக்கீசர். இந் நிலையிற் புலவராக வந்த இறைவர் தம் சடை முடியைப் புலப்படுத்தினர். அதனை யுணர்ந்த நக்கீரர் தமிழ் வல்ல என்னை நும் சடையினைக் காட்டி வெருட்ட வேண்டாம் என் ருர், சினமுற்ற இறைவர் நெற்றிக் கண்ணக் கட்டிஞர். நெற்றிக் கண்ணழலால் வெதுப்புற்ற நிலயிலும் அச்சமுருத நக்கீசர் நும் உடல் முழுதும் நெருப்புக்கண்ணேயாயினும் குற்றங் குற்றமே

யென இறைவனை நோக்கிக் கூறினர். அமமொழிகளைக் கேட்ட இறைவர், நக்கீரரை நோக்கி நன்னெறி வழக் கினை அறியாதவனே, வழிபடு தெய்வமாகிய கவுரியின் கூந்தலை மற்றை மாதாது கூந்தலை யொப்ப இழிவாகக் கருதினையோ ? மறைகள் ஞானப் பூங்கோதை யென்ற பொருளில் உமாதேவியைப் போற்றும் மொழியின் உணர்ந்திலேயோ ? மடம் நானம் முதலிய குணங்கள்